தொழில்நுட்பம்
சியோமி

ரெட்மி 10 வெளியீட்டை தவறுதலாக உறுதிப்படுத்திய சியோமி

Update: 2021-08-16 04:19 GMT
சியோமி நிறுவனத்தின் புது ஸ்மார்ட்போன் வெளியீடு விரைவில் நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது.


சியோமி நிறுவனத்தின் ரெட்மி 10 விவரங்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வந்தது. தற்போது இதன் வெளியீட்டை அந்நிறுவனம் உறுதிப்படுத்தி இருக்கிறது. சியோமியின் சர்வேதச வலைதளத்தில் ரெட்மி 10 அம்சங்கள், புகைப்படங்கள் மற்றும் இதர விவரங்கள் தவறுதாக வெளியாகி பின் நீக்கப்பட்டு விட்டது.அம்சங்களை பொருத்தவரை ரெட்மி 10 மாடலில் 6.5 இன்ச் FHD+ 1080x2400 பிக்சல் டாட் டிஸ்ப்ளே, ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி88 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜிபி ரேம், 50 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு சென்சார், 2 எம்பி மேக்ரோ சென்சார், 2 எம்பி டெப்த் சென்சார், 8 எம்பி செல்பி கேமரா வழங்கப்படுகிறது.

ரெட்மி 10 ஸ்மார்ட்போன் 64 ஜிபி மற்றும் 128 ஜிபி மெமரி வேரியண்ட்களில் கிடைக்கும். இதன் பக்கவாட்டில் கைரேகை சென்சார், 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங், 9 வாட் ரிவர்ஸ் சார்ஜிங் வழங்கப்படுகிறது. வலைதளத்தில் ரெட்மி 10 விலை விவரங்கள் எதுவும் இடம்பெறவில்லை.
Tags:    

Similar News