தொழில்நுட்பம்
மோட்டோரோலா ஸ்மார்ட்போன்

மோட்டோவின் புதிய 5ஜி ஸ்மார்ட்போன் இந்திய விலை இவ்வளவு தானா?

Update: 2021-08-14 04:20 GMT
மோட்டோரோலா நிறுவனம் இந்திய சந்தையில் எட்ஜ் 20 மற்றும் எட்ஜ் 20 பியூஷன் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.


மோட்டோரோலா நிறுவனத்தின் எட்ஜ் 20 மற்றும் எட்ஜ் 20 பியூஷன் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் ஆகஸ்ட் 17 ஆம் தேதி அறிமுகமாக இருக்கின்றன. புது ஸ்மார்ட்போன்கள் 5ஜி கனெக்டிவிட்டி உள்பட பல்வேறு பிரீமியம் அம்சங்களை கொண்டிருக்கின்றன. மோட்டோ எட்ஜ் 20 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ஏற்கனவே சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு விட்டன. 

அந்த வகையில் இதன் அம்சங்கள் பெரும்பாலும் அம்பலமாகிவிட்டன. தற்போது இரு ஸ்மார்ட்போன்களின் இந்திய விலை விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது. தற்போதைய தகவல்களின் படி மோட்டோரோலா எட்ஜ் 20 பியூஷன் ஸ்மார்ட்போன் இரண்டு வேரியண்ட்களில் விற்பனைக்கு வரும் என கூறப்படுகிறது.மோட்டோரோலா எட்ஜ் 20 பியூஷன் 6 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 21,499 என்றும் 8 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 23,999 என்றும் நிர்ணயம் செய்யப்படலாம். எட்ஜ் 20 ஸ்மா்ட்போனின் 8 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 29,999 வரை நிர்ணயிக்கப்படலாம்.

இந்த விலை பிரிவில் மோட்டோ எட்ஜ் 20 பியூஷன் ஸ்மார்ட்போன் சியோமியின் எம்.ஐ. 11 லைட் மாடலுக்கும் மோட்டோ எட்ஜ் 20 மாடல் ஒன்பிளஸ் நார்டு 2 மாடலுக்கும் போட்டியாக அமைகின்றன. இரு மோட்டோ ஸ்மார்ட்போன்களின் விலை இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News