தொழில்நுட்பம்
சாம்சங் கேலக்ஸி ஏ12

5000 எம்.ஏ.ஹெச். பேட்டரியுடன் கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்

Update: 2021-08-13 04:20 GMT
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன் எக்சைனோஸ் பிராசஸருடன் அறிமுகமாகி இருக்கிறது.


சாம்சங் நிறுவனம் இந்திய சந்தையில் கேலக்ஸி ஏ12 ஸ்மார்ட்போனினை எக்சைனோஸ் 850 பிராசஸருடன் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய பிராசஸர் தவிர கேலக்ஸி ஏ12 மாடலில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

மற்ற அம்சங்களை பொருத்த வரை கேலக்ஸி ஏ12 மாடலில் 6.5 இன்ச் HD+ இன்பினிட்டி வி டிஸ்ப்ளே, பின்புறம் மேட் பினிஷ், 48 எம்பி குவாட் பிரைமரி கேமரா சென்சார்கள், 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 15 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.சாம்சங் கேலக்ஸி ஏ12 அம்சங்கள்

- 6.5 இன்ச் 1560x720 பிக்சல் HD+ LCD இன்பினிட்டி வி டிஸ்ப்ளே
- எக்சைனோஸ் 850 ஆக்டாகோர் பிராசஸர்
- மாலி-G52
- 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி
- 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி 
- ஆண்ட்ராய்டு 11 மற்றும் சாம்சங் ஒன் யுஐ கோர் 3.1
- டூயல் சிம் ஸ்லாட் 
- 48 எம்பி பிரைமரி கேமரா, எல்.இ.டி. பிளாஷ், f/2.0
- 5 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, f/2.2
- 2 எம்பி டெப்த் கேமரா
- 2 எம்பி மேக்ரோ லென்ஸ், f/2.4 
- 8 எம்பி செல்பி கேமரா, f/2.0
- பக்கவாட்டில் கைரேகை சென்சார்
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எப்.எம். ரேடியோ
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- 15 வாட் பாஸ்ட் சார்ஜிங்

புதிய சாம்சங் கேலக்ஸி ஏ12 ஸ்மார்ட்போன் பிளாக், வைட் மற்றும் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜிபி + 64 ஜிபி மாடல் விலை ரூ. 13,999 என்றும் 6 ஜிபி + 128  ஜிபி மாடல் விலை ரூ. 16,499 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News