தொழில்நுட்பம்
ஒன்பிளஸ் 9 ப்ரோ

புதிய நிறத்தில் ஒன்பிளஸ் 9 ப்ரோ - டீசர் வெளியீடு

Update: 2021-08-06 07:15 GMT
ஒன்பிளஸ் நிறுவனத்தின் சமீபத்திய பிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் விரைவில் புதிய நிறத்தில் அறிமுகமாக இருக்கிறது.


ஒன்பிளஸ் நிறுவனம் தனது ஒன்பிளஸ் 9 ப்ரோ ஸ்மார்ட்போனினை - மார்னிங் மிஸ்ட், பைன் கிரீன் மற்றும் ஸ்டெல்லார் பிளாக் என மூன்று நிறங்களில் அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் 9 மற்றும் ஒன்பிளஸ் 9ஆர் மாடல்களுடன் அறிமுகம் செய்யப்பட்டது. 

தற்போது ஒன்பிளஸ் 9 ப்ரோ வைட் நிற வேரியண்ட் அறிமுகமாக இருக்கிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் புதிய நிற வேரியண்டிற்கான டீசரை ஒன்பிளஸ் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. புது வேரியண்டில் நிறம் தவிர வேறு எந்த மாற்றமும் இருக்காது என்றே தெரிகிறது.அம்சங்களை பொருத்தவரை ஒன்பிளஸ் 9 ப்ரோ மாடலில் 6.7 இன்ச் QHD+ LTPO AMOLED டிஸ்ப்ளே, 3216x1440 பிக்சல் ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர், அடிரினோ 660 GPU வழங்கப்பட்டு இருக்கிறது.

புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 50 எம்பி சென்சார், 8 எம்பி டெலிபோட்டோ சென்சார், 2 எம்பி மோனோகுரோம் சென்சார், 16 எம்பி செல்பி கேமராவும் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர், டைப் சி சார்ஜிங் போர்ட், இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், ஆண்ட்ராய்டு 11 சார்ந்த ஆக்சிஜன் ஒஎஸ் 11 வழங்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News