தொழில்நுட்பம்
கூகுள் பிக்சல் 6 சீரிஸ் டீசர்

கூகுள் பிக்சல் 6 சீரிஸ் டீசர் வெளியீடு

Update: 2021-08-03 11:31 GMT
கூகுளின் புதிய பிக்சல் 6 சீரிஸ் மாடல்களில் கேமரா பம்ப் சதுரங்க வடிவில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.


கூகுள் நிறுவனம் பிக்சல் 6 மற்றும் பிக்சல் 6 ப்ரோ ஸ்மார்ட்போன்களின் வெளியீட்டை ஒருவழியாக உறுதிப்படுத்தி இருக்கிறது. புது ஸ்மார்ட்போன்களின் டீசரை கூகுள் வெளியிட்டு உள்ளது. இவற்றுடன் ஸ்மார்ட்போனின் புகைப்படங்கள் மற்றும் அதில் வழங்கப்பட இருக்கும் பிராசஸரையும் கூகுள் அறிவித்துள்ளது. அதன்படி புதிய பிக்சல் ஸ்மார்ட்போன்கள் டென்சார் சிப்செட் கொண்டு சக்தியூட்டப்படுகின்றன. முந்தைய தகவல்களில் இதே பிராசஸர் GS101 மாடல் நம்பர் மற்றும் வைட் சேப்பல் எனும் குறியீட்டு பெயரில் உருவாகி வருவதாக தகவல் வெளியாகி இருந்தது. புதிய பிக்சல் ஸ்மார்ட்போன்கள் அதிக பாதுகாப்பு அம்சங்களுடன் உருவாகி வருகிறது.

இரு மாடல்களிலும் மேட் பினிஷ் செய்யப்பட்டுள்ளது. எனினினும், பிக்சல் 6 ப்ரோ மாடலில் பாலிஷ் செய்யப்பட்ட அலுமினியம் பிரேம் வழங்கப்பட இருக்கிறது. மேம்பட்ட சென்சார் மற்றும் லென்ஸ்கள் மிகவும் பெரிது என்பதால் வழக்கமான டிசைனுக்கு மாற்றாக புதிய கேமரா பார் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் பிக்சல் 6 ப்ரோ மாடலில் டெலிபோட்டோ கேமரா வழங்கப்படுகிறது. 
Tags:    

Similar News