தொழில்நுட்பம்
ஸ்டீவ் ஜாப்ஸ்

ரூ. 2.5 கோடிக்கு விற்கப்பட்ட ஸ்டீவ் ஜாப்ஸ் விண்ணப்பம்

Published On 2021-07-31 07:18 GMT   |   Update On 2021-07-31 07:18 GMT
ஸ்டீவ் ஜாப்ஸ் பூர்த்தி செய்த ஒரே விண்ணப்ப படிவம் ப்ரின்ட் மற்றும் என்.எப்.டி. முறையில் ஏலம் விடப்பட்டது.


ஆப்பிள் இணை நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் நினைவுச்சின்னங்கள் பல கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த பட்டியலில் இம்முறை ஜாப்ஸ், பணி வழங்க கோரி பூர்த்தி செய்த விண்ணப்ப படிவம் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது. ஸ்டீவ் ஜாப்ஸ் விண்ணப்ப படிவம் இந்திய மதிப்பில் ரூ. 2.5 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டு இருக்கிறது.



இந்த விண்ணப்ப படிவத்தை ஸ்டீவ் ஜாப்ஸ் 1973 ஆம் ஆண்டு தனது 18 ஆவது வயதில் இருந்த போது பூர்த்தி செய்தார். ஸ்டீவ் ஜாப்ஸ் தன் வாழ்நாளில் பூர்த்தி செய்த ஒரே விண்ணப்ப படிவம் ஆகும். ஆன்லைனில் நடைபெற்ற ஏலத்தில் விண்ணப்ப படிவம் 3.43 லட்சம் டாலர்களுக்கு விற்பனை செய்யப்பட்டது. இது இந்திய மதிப்பில் ரூ. 2,54,95,018.50 ஆகும். 

ஸ்டீவ் ஜாப்ஸ் விண்னப்பத்திற்கான ஏலம் ப்ரின்ட் மற்றும் என்.எப்.டி. வகையில் நடைபெற்றது. ப்ரின்ட் வடிவத்திற்கு டாலர்களிலும், என்.எப்.டி.க்கான ஏலம் எத்தெரியம் மூலமாகவும் நடைபெற்றது. என்.எப்.டி.-யை விட விண்ணப்பத்தின் ப்ரின்ட் வடிவத்திற்கு நான்கு மடங்கு அதிக தொகை வழங்கப்பட்டது. ப்ரின்ட் வடிவத்திற்கான அதிகபட்ச தொகை 3.43 லட்சம் டாலர்கள் வரை கேட்கப்பட்டது.

Tags:    

Similar News