தொழில்நுட்பம்
சோனி பிளே ஸ்டேஷன் 5

விற்பனையில் ஒரு கோடி யூனிட்களை கடந்த பிளே ஸ்டேஷன் 5

Published On 2021-07-29 10:09 GMT   |   Update On 2021-07-29 10:09 GMT
சோனியின் புதிய பிளே ஸ்டேஷன் 5 கேமிங் கன்சோல் அதிவேகமாக விற்பனையாகும் பிளே ஸ்டேஷன் என்ற பெருமையை பெற்று இருக்கிறது.


சோனி கார்ப்பரேஷன் தனது பிளே ஸ்டேஷன் 5 கன்சோல் உலகளாவிய விற்பனையில் ஒரு கோடி யூனிட்களை கடந்துள்ளதாக அறிவித்து இருக்கிறது. மேலும் அதிவேக விற்பனையாகும் பிளே ஸ்டேஷன் கன்சோலாகவும் பிளே ஸ்டேஷன் 5 இருக்கிறது. 

முன்னதாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் சுமார் 45 லட்சம் பிளே ஸ்டேஷன் 5 யூனிட்கள் விற்பனையாகி இருந்தது. பின் 2021 மார்ச் மாத வாக்கில் சுமார் 78 லட்சம் யூனிட்கள் விற்பனையாகி இருந்தது. மொத்தத்தில் ஒரு கோடி பிளே ஸ்டேஷன் 5 யூனிட்கள் எட்டு மாதங்களில் விற்பனை செய்யப்பட்டு இருக்கிறது.



முந்தைய பிளே ஸ்டேஷன் 4 கன்சோல் விற்பனையில் பத்து கோடி யூனிட்களை ஆறு ஆண்டுகளில் எட்டியது. தற்போதைய வரவேற்பை பார்க்கும் போது, புதிய பிளே ஸ்டேஷன் 5 இந்த மைல்கல்லை முன்கூட்டியே எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

வன்பொருள் பொறியியல் நிர்வாக குழு மற்றும் சர்வதேச வியாபார நிர்வாக குழுவின் ஒருங்கிணைந்த முயற்சி காரணமாகவே மிக குறுகிய காலக்கட்டத்தில் இத்தனை யூனிட்களை விற்பனை மற்றும் வினியோகம் செய்ய முடிந்தது என சோனி நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

Tags:    

Similar News