தொழில்நுட்பம்
ரியல்மி

அந்த அம்சம் கொண்ட உலகின் முதல் ஆண்ட்ராய்டு போன் - ரியல்மி அசத்தல்

Published On 2021-07-27 11:29 GMT   |   Update On 2021-07-27 11:29 GMT
ரியல்மி நிறுவனம் தனது புது ஸ்மார்ட்போனிற்கான டீசரை வெளியிட்டு உள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.


ரியல்மி பிளாஷ் ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் என ரியல்மி இந்தியா தலைமை செயல் அதிகாரி மாதவ் சேத் தெரிவித்து இருக்கிறார். இது மேக்னடிக் வயர்லெஸ் சார்ஜிங் வசதி கொண்ட உலகின் முதல் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் ஆகும். முன்னதாக இந்த ஸ்மார்ட்போனின் பெயர் குறிப்பிடாமல் டீசரை மட்டும் ரியல்மி வெளியிட்டு இருந்தது.



புது ஸ்மார்ட்போன் வெளியீட்டை ரியல்மி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் வழங்கப்படும் மேக்னடிக் வயர்லெஸ் சார்ஜிங் அம்சம் மேக்டார்ட் என அவைக்கப்பட இருக்கிறது. மேக்டார்ட் என்பது க்ளிப்-ஆன் அக்சஸரி ஆகும். இது ஏற்கனவே விற்பனை செய்யப்படும் ஆப்பிள் மேக்சேப் சாதனத்தை போன்றே செயல்படுகிறது.

மேக்டார்ட் சாதனத்துடன் கூலிங் பேன் ஒன்றும் வழங்கப்படுகிறது. இந்த பேன் யு.எஸ்.பி. டைப் சி கனெக்டர் கொண்டிருக்கிறது. இது சார்ஜிங்கின் போது ஸ்மார்ட்போன் அதிக சூடாகாமல் பார்த்துக் கொள்ள வழி செய்கிறது. தற்போதைய தகவல்களின்படி ரியல்மி பிளாஷ் ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர், 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி கொண்டிருக்கும் என தெரிகிறது.

Tags:    

Similar News