தொழில்நுட்பம்
மேக்புக் ஏர்

13 இன்ச் மினி எல்.இ.டி. டிஸ்ப்ளே கொண்ட மேக்புக் ஏர் வெளியீட்டு விவரம்

Published On 2021-07-23 11:36 GMT   |   Update On 2021-07-23 11:36 GMT
ஆப்பிள் நிறுவனம் உருவாக்கி வரும் புதிய மேக்புக் ஏர் விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.


ஆப்பிள் நிறுவனம் தனது மேக்புக் ஏர் மாடலை அடுத்த ஆண்டு அப்டேட் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி 13.3 இன்ச் மினி எல்.இ.டி. டிஸ்ப்ளே கொண்ட மேக்புக் ஏர் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

முந்தைய தகவல்களிலும் புதிய மேக்புக் ஏர் அடுத்த ஆண்டு அறிமுகமாகும் என்றே குறிப்பிடப்பட்டு இருந்தது. இதுதவிர 14 மற்றும் 16 இன்ச் மேக்புக் ப்ரோ மாடல்களை ஆப்பிள் இந்த ஆண்டு அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மினி எல்.இ.டி. தொழில்நுட்பம் வழக்கமான OLED பேனல்களை போன்ற பலன்களை அளிக்கிறது.



எனினும், மினி எல்.இ.டி. சிறப்பான கான்டிராஸ்ட், மேம்பட்ட டைனமிக் ரேன்ஜ் வழங்குகிறது. மினி எல்.இ.டி. தொழில்நுட்பம் கொண்டு வெளியான ஆப்பிள் நிறுவனத்தின் முதல் சாதனமாக 2021 12.9 இன்ச் ஐபேட் ப்ரோ இருக்கிறது. இவைதவிர மேலும் பல்வேறு ஆப்பிள் சாதனங்களில் மினி எல்.இ.டி. தொழில்நுட்பம் வழங்கப்பட இருப்பதாக ஆப்பிள் வல்லுநர்கள் தகவல் தெரிவித்து இருக்கின்றனர்.

புது மேக்புக் ஏர் மாடல் மேக்சேப் சார்ஜிங் வசதி, குறைந்தபட்சம் இரண்டு யு.எஸ்.பி. 4 போர்ட்கள், குறைந்த எடையில் மிக மெல்லிய டிசைன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. மேலும் இந்த மேக்புக் ஏர் கடந்த ஆண்டு ஆப்பிள் அறிமுகம் செய்த எம்1 பிராசஸரின் மேம்பட்ட வெர்ஷனை கொண்டிருக்கும் என தெரிகிறது.

Tags:    

Similar News