தொழில்நுட்பம்
ஆப்பிள் ஏர்பாட்ஸ்

மாணவர்களுக்கு இலவச ஏர்பாட்ஸ் வழங்கும் ஆப்பிள்

Published On 2021-07-16 19:35 IST   |   Update On 2021-07-16 19:35:00 IST
ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு அசத்தல் சலுகைகளை அறிவித்து இருக்கிறது.

ஆப்பிள் நிறுவனம் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்காக சிறப்பு சலுகைகளை அறிவித்து இருக்கிறது. இம்முறை தேர்வு செய்யப்பட்ட மேக்புக், ஐமேக் மற்றும் ஐபேட் மாடல்களை வாங்குவோருக்கு இலவசமாக ஏர்பாட்ஸ் வழங்குகிறது.



மேக்புக் ஏர், மேக்புக் ப்ரோ, ஐமேக், மேக் ப்ரோ, மேக் மினி, ஐபேட் ப்ரோ மற்றும் ஐபேட் ஏர் போன்ற மாடல்களை வாங்குவோருக்கு இலவசமாக ஏர்பாட்ஸ் வழங்கப்படுகிறது. இதுதவிர ஏர்பாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் ரூ. 4 ஆயிரத்திற்கும், ஏர்பாட்ஸ் ப்ரோ மாடல் ரூ. 10 ஆயிரத்திற்கும் வழங்கப்படுகிறது.

இலவச ஏர்பாட்ஸ் மட்டுமின்றி ஆப்பிள்கேர் சேவையில் 20 சதவீத தள்ளுபடி, ஆப்பிள் பென்சில், கீபோர்டு சாதனங்களுக்கு சிறப்பு தள்ளுபடி, ஆப்பிள் மியூசிக் ஸ்டூடன்ட் திட்டம் மாதத்திற்கு ரூ. 49 விலையில் வழங்கப்படுகிறது. இத்துடன் ஆப்பிள் ஆர்கேட் சேவை முதல் மூன்று மாதங்களுக்கு இலவசமாகவும், அதன்பின் மாதம் 99 ரூபாய் கட்டணத்திலும் வழங்கப்படுகிறது.

Similar News