தொழில்நுட்பம்
சாம்சங் கேலக்ஸி எம்21 2021

சாம்சங் புது எம் சீரிஸ் ஸ்மார்ட்போன் வெளியீட்டு விவரம்

Published On 2021-07-16 10:37 GMT   |   Update On 2021-07-16 10:37 GMT
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம்21 2021 ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதியை அமேசான் அறிவித்து இருக்கிறது.

சாம்சங் கேலக்ஸி எம்21 2021 எடிஷன் ஜூலை 21 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகிறது. புதிய சாம்சங் ஸ்மார்ட்போன் பிரைம் டே 2021 விற்பனையை முன்னிட்டு அறிமுகம் செய்யப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி எம்21 2021 மாடலில் 6.4 இன்ச் FHD+ இன்பினிட்டி யு சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, 48 எம்பி பிரைமரி கேமராவுடன் மூன்று சென்சார்கள் மற்றும் 6000 எம்.ஏஹெச். பேட்டரி வழங்கப்படுகிறது.  



இதன் பின்புறம் கைரேகை சென்சார் காணப்படுகிறது. எனினும், பின்புறம் தோற்றம் முந்தைய மாடலில் உள்ளதை விட வித்தியாசமாக இருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, 5 எம்பி டெப்த் சென்சார் மற்றும் 20 எம்பி செல்பி கேமரா வழங்கப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி எம்21 2021 எடிஷன் ஆர்க்டிக் புளூ மற்றும் சார்கோல் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கிறது. இதன் விலை மற்றும் இதர விவரங்கள் அடுத்த வாரம் தெரியவரும்.  
Tags:    

Similar News