தொழில்நுட்பம்
ஒப்போ ரெனோ 6 5ஜி

ஒப்போ ரெனோ 6 சீரிஸ் 5ஜி ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம்

Published On 2021-07-14 10:37 GMT   |   Update On 2021-07-14 10:37 GMT
ஒப்போ நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் புதிய 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது.

ஒப்போ ரெனோ 6 5ஜி மற்றும் ரெனோ 6 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டன. இரு மாடல்களும் ஒப்போ நிறுவனத்தின் புது பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் ஆகும். முன்னதாக ரெனோ 6 சீரிஸ் மாடல்கள் சீன சந்தையில் மூன்று வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டன. 

இவற்றில் இரு வேரியண்ட்கள் தற்போது இந்திய சந்தையில் அறிமுகமாகி இருக்கின்றன. ஒப்போ ரெனோ 6 5ஜி மாடலில் ஆண்ட்ராய்டு 11 சார்ந்த கலர் ஒஎஸ் 11.3, 6.43 இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளே, மீடியாடெக் டிமென்சிட்டி 900 பிராசஸர், 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வழங்கப்பட்டு உள்ளது.

புகைப்படங்களை எடுக்க 64 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்பி மேக்ரோ லென்ஸ் மற்றும் 32 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.



ஒப்போ ரெனோ 6 ப்ரோ 5ஜி மாடலில் 6.55 இன்ச் FHD+ வளைந்த AMOLED டிஸ்ப்ளே, மீடியாடெக் டிமென்சிட்டி 1200 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது. புகைப்படங்களை எடுக்க ரெனோ 6 5ஜி மாடலில் உள்ள சென்சார்களுடன் கூடுதலாக 2 எம்பி மோனோ கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

கனெக்டிவிட்டியை பொருத்தவரை இரு மாடல்களிலும் 5ஜி, வைபை 6, ப்ளூடூத் 5.2, ஜி.பி.எஸ். மற்றும் யு.எஸ்.பி. டைப் சி வழங்கப்பட்டு இருக்கிறது. ரெனோ 6 5ஜி மாடலில் 4300 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 65 வாட் சூப்பர்வூக் 2.0 பாஸ்ட் சார்ஜிங் வழங்கப்பட்டுள்ளது. ரெனோ 6 ப்ரோ 5ஜி மாடலில் 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 65 வாட் சூப்பர்வூக் 2.0 பாஸ்ட் சார்ஜிங் வழங்கப்பட்டுள்ளது.

ஒப்போ ரெனோ 6 5ஜி விலை ரூ. 29,990 ஆகும். ரெனோ 6 ப்ரோ 5ஜி மாடல் விலை ரூ. 39,990 ஆகும். இரு மாடல்களும் ப்ளிப்கார்ட், ரிலையன்ஸ் டிஜிட்டல், விஜய் சேல்ஸ், க்ரோமா, ஒப்போ வலைதளம் மற்றும் இதர விற்பனை மையங்களில் கிடைக்கும்.
Tags:    

Similar News