தொழில்நுட்பம்
சாம்சங் ஸ்மார்ட்போன்

அடுத்த மாதம் இந்தியா வரும் சாம்சங் 5ஜி ஸ்மார்ட்போன்

Published On 2021-07-14 04:15 GMT   |   Update On 2021-07-14 17:50 GMT
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ22 5ஜி ஸ்மார்ட்போன் விவரங்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வருகின்றன.

சாம்சங் கேலக்ஸி ஏ22 ஸ்மார்ட்போன் இம்மாத துவக்கத்தில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் ரூ. 18,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. கேலக்ஸி ஏ22 வெளியீட்டை தொடர்ந்து இதே ஸ்மார்ட்போனின் 5ஜி வேரியண்ட் உருவாகி வருவதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகி வருகின்றன. 

அந்த வரிசையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் கேலக்ஸி ஏ22 5ஜி ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. தற்போது இந்த ஸ்மார்ட்போன் ஐரோப்பாவில் விற்பனை செய்யப்படுகிறது.



அம்சங்களை பொருத்தவரை சாம்சங் கேலக்ஸி ஏ22 5ஜி ஸ்மார்ட்போன் 6.6 இன்ச் IPS LCD டிஸ்ப்ளே, ஆண்ட்ராய்டு 11 சார்ந்த ஒன் யு.ஐ. 3.1, 8 எம்பி செல்பி கேமரா வழங்கப்படும் என தெரிகிறது. இத்துடன் 48 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ், 2 எம்பி டெப்த் சென்சார், 5000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 15 வாட் பாஸ்ட் சார்ஜிங் வழங்கப்படுகிறது.

புதிய ஸ்மார்ட்போனில் மீடியாடெக் டிமென்சிட்டி 700 5ஜி பிராசஸர், 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்படும் என தெரிகிறது. ஐரோப்பாவில் கேலக்ஸி ஏ22 5ஜி மாடல் விலை இந்திய மதிப்பில் ரூ. 20,100 ஆகும்.
Tags:    

Similar News