தொழில்நுட்பம்
ஐபோன் 12

ஐபோன் 12 சீரிஸ் விற்பனை குறித்து இணையத்தில் வெளியான தகவல்

Published On 2021-07-03 04:36 GMT   |   Update On 2021-07-03 04:36 GMT
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 12 சீரிஸ் மாடல்கள் விற்பனையில் இத்தனை யூனிட்களை கடந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆப்பிள் ஐபோன் 12 சீரிஸ் மாடல்கள் ஸ்மார்ட்போன் சந்தையில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களின்படி, ஐபோன் 12 சீரிஸ் மாடல்கள் விற்பனையில் பத்து கோடி யூனிட்களை கடந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த விவரங்கள் தனியார் ஆய்வு நிறுவனம் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் இடம்பெற்று இருக்கிறது.



அதன்படி ஐபோன் 12 சீரிஸ் மாடல்கள் விற்பனைக்கு வந்த ஏழே மாதங்களில் சுமார் பத்து கோடி யூனிட்களை கடந்துள்ளது. முன்னதாக ஐபோன் 11 சீரிஸ் மாடல்கள் பத்து கோடி யூனிட்களை கடக்க ஒன்பது மாதங்கள் ஆனது. ஒட்டுமொத்த விற்பனையில் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் மட்டும் 40 சதவீத பங்குகளை பெற்று இருக்கிறது. இத்தனை யூனிட்கள் 2020 டிசம்பர் முதல் ஏப்ரல் 2021 வரையிலான காலக்கட்டத்தில் விற்பனையாகி இருக்கின்றன. 

ஐபோன் 11 சீரிஸ் வெளியான ஏழு மாதங்களில் ஆப்பிள் பெற்ற வருவாயை விட ஐபோன் 12 சீரிஸ் கொண்டு ஏழு மாதங்களில் ஆப்பிள் பெற்ற வருவாய் 22 சதவீதம் அதிகம் ஆகும். கடந்த ஆண்டு ஸ்மார்ட்போன் விற்பனை 12.5 சதவீதம் சரிவடைந்தது. எனினும், கொரோனா பெருந்தொற்றுக்கு பின் ஸ்மார்ட்போன் விற்பனை மீண்டும் அதிகரித்து வருகிறது.

Tags:    

Similar News