தொழில்நுட்பம்
வலைதள ஸ்கிரீன்ஷாட்

விரைவில் இந்தியா வரும் சாம்சங் ஸ்மார்ட்வாட்ச்

Published On 2021-06-29 15:59 IST   |   Update On 2021-06-29 15:59:00 IST
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி வாட்ச் 4 அந்நிறுவன வலைதளங்களில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது.


சாம்சங் கேலக்ஸி வாட்ச் 4 மாடலுக்கான வலைபக்கம் சாம்சங் இந்தியா, ரஷ்யா மற்றும் கரீபியன் பகுதிகளுக்கான தளங்களில் துவங்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக இந்த ஸ்மார்ட்வாட்ச் விரைவில் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது. கேலக்ஸி வாட்ச் 4 குறித்து சாம்சங் இதுவரை எந்த தகவலையும் வெளியிடவில்லை.



எனினும், புது ஸ்மார்ட்வாட்ச் மாடலை சாம்சங் விரைவில் நடைபெற இருக்கும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக கூறி டீசரை வெளியிட்டு இருந்தது. ஸ்மார்ட்வாட்ச் மட்டுமின்றி கேலக்ஸி பட்ஸ் 2 ரென்டர்களும் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.

இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின்படி கேலக்ஸி வாட்ச் 4 மாடல் வட்ட வடிவ தோற்றம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. அம்சங்களை பொருத்தவரை BIA சென்சார், இதய துடிப்பு சென்சார், SpO2 டிராக்கிங், 5ATM தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் 40mm மற்றும் 44mm அளவுகளில் கிடைக்கும் என கூறப்படுகிறது.

Similar News