தொழில்நுட்பம்
ஐஒஎஸ்

ஐபோனில் வைபை கனெக்ட் ஆகவில்லையா? அப்ப இதை செய்யுங்க

Published On 2021-06-21 06:51 GMT   |   Update On 2021-06-21 06:51 GMT
ஆப்பிள் நிறுவனத்தின் ஐஒஎஸ் தளத்தில் ஏற்பட்டு இருக்கும் புதிய பிழை வைபை பயன்பாட்டில் இடையூறு ஏற்படுத்துகிறது.

ஐஒஎஸ் தளத்தில் புது பிழை கண்டறியப்பட்டு இருக்கிறது. இது ஐபோன்களின் வைபை வசதியை செயலிழக்க செய்கிறது. இந்த பிழையை ரிவர்ஸ் என்ஜினியர் கால் ஷௌ கண்டறிந்து தெரிவித்தார். 

புதிய பிழை  SSID %p%s%s%s%s%n எனும் பெயர் கொண்ட வைபையுடன் இணைய முயற்சிக்கும் போது ஏற்படுகிறது. இது உலகில் பயன்படுத்தப்பட்டு வரும் லட்சக்கணக்கான சாதனங்களில் பாதிப்பை ஏற்படுத்த வழி வகுக்கிறது. இந்த பிழை தூண்டப்படும் போது ஐபோன் பயனர்களால் வைபை வசதியை ஆன் செய்ய முடியாது. ஐபோனினை ரீ-ஸ்டார்ட் செய்தாலும் இந்த பிழை சரியாகாது.



இந்த பிழை குறித்து ஆப்பிள் சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. எனினும், இதனை சரி செய்ய ஐபோனின் நெட்வொர்க் செட்டிங்கை ரீசெட் செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும் போது ஐபோனில் சேமிக்கப்பட்டு இருந்த வைபை பாஸ்வேர்டுகள் அழிக்கப்பட்டு விடும்.

ஐபோனில் வைபை நெட்வொர்க் செட்டிங்களை ரீசெட் செய்ய  Settings > General > Reset > Reset Network Settings போன்ற ஆப்ஷன்களை க்ளிக் செய்ய வேண்டும். இது குறுகியகால தீர்வு ஆகும். இவ்வாறு செய்யும் போது ஐபோன் பலமுறை பாதிக்கப்படும்.
Tags:    

Similar News