தொழில்நுட்பம்
ரியல்மி நார்சோ 30

ரியல்மி நார்சோ 30 5ஜி இந்திய வெளியீட்டு விவரம்

Published On 2021-06-14 10:52 GMT   |   Update On 2021-06-14 10:52 GMT
ரியல்மி நிறுவனத்தின் நார்சோ 30 மற்றும் நார்சோ 30 5ஜி ஸ்மார்ட்போன்கள் ஜூன் மாதத்திலேயே அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது.

ரியல்மி நிறுவனம்  நார்சோ 30 மற்றும் நார்சோ 30 5ஜி ஸ்மார்ட்போன்கள் இம்மாதத்திலேயே அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த தகவலை ரியல்மி இந்தியா தலைமை செயல் அதிகாரி மாதவ் சேத் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. 

முன்னதாக பிப்ரவரி மாத வாக்கில் நார்சோ 30 ப்ரோ மற்றும் நார்சோ 30ஏ ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டன. இதுதவிர நார்சோ 30 ஸ்மார்ட்போன் மலேசியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இது ரியல்மி 8 மாடலின் டோன்-டவுன் செய்யப்பட்ட வெர்ஷன் ஆகும். 



ரியல்மி நார்சோ 30 அம்சங்கள்

- 6.5 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ LCD ஸ்கிரீன்
- ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி95 பிராசஸர்
- 900MHz மாலி-G76 3EEMC4 GPU
- 6 ஜிபி LPPDDR4x ரேம், 128 ஜிபி (UFS 2.1) மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- டூயல் சிம் ஸ்லாட் 
- ஆண்ட்ராய்டு 11 மற்றும் ரியல்மி யுஐ 2.0
- 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.8, LED பிளாஷ்
- 2 எம்பி B&W போர்டிரெயிட் கேமரா
- 2 எம்பி மேக்ரோ சென்சார், f/2.4
- 16 எம்பி செல்பி கேமரா, f/2.1
- பக்கவாட்டில் கைரேகை சென்சார் 
- 3.5 எம்எம் ஆடியோ ஜாக்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- யுஎஸ்பி டைப் சி 
- 5000 எம்ஏஹெச் பேட்டரி
- 30 வாட் டார்ட் சார்ஜ் பாஸ்ட் சார்ஜிங் 

Tags:    

Similar News