தொழில்நுட்பம்
ஒன்பிளஸ் நார்டு CE 5ஜி

அதிகபட்சம் 12 ஜிபி ரேம் கொண்ட நார்டு CE 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

Published On 2021-06-11 04:34 GMT   |   Update On 2021-06-11 04:34 GMT
ஒன்பிளஸ் நிறுவனத்தின் நார்டு CE 5ஜி ஸ்மார்ட்போன் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 750ஜி பிராசஸர் கொண்டிருக்கிறது.

ஒன்பிளஸ் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் நார்டு CE 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. புதிய ஒன்பிளஸ் நார்டு CE 5ஜி மாடலில் 6.43 இன்ச் FHD+ புளூயிட் AMOLED டிஸ்ப்ளே, ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 750ஜி பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.

ஆண்ட்ராய்டு 11 சார்ந்த ஆக்சிஜன் ஒஎஸ் 11 கொண்டிருக்கும் நார்டு CE 5ஜி மாடலுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மென்பொருள் அப்டேட், மூன்று ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி அப்டேட் வழங்குவதாக ஒன்பிளஸ் உறுதியளித்து இருக்கிறது.

மெமரியை பொருத்தவரை நார்டு CE 5ஜி மாடல் - 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. இத்துடன் டூயல் சிம் ஸ்லாட், இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 3.5 எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.



புகைப்படங்களை எடுக்க 64 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்பி மோனோ கேமரா, 16 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. கனெக்டிவிட்டிக்கு 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6, ப்ளூடூத் 5.1, யுஎஸ்பி டைப் சி உள்ளது. இத்துடன் 4500 எம்ஏஹெச் பேட்டரி, 30டி வார்ப் சார்ஜ் பிளஸ் பாஸ்ட் சார்ஜிங் உள்ளது.

ஒன்பிளஸ் நார்டு CE 5ஜி மாடல் மேட் பினிஷ் கொண்ட புளூ வாய்ட், கிளாஸி பினிஷ் கொண்ட சார்கோல் இன்க் மற்றும் கிரேடியன்ட் எபெக்ட் கொண்ட சில்வர் ரே நிறங்களில் கிடைக்கிறது. இதன் பேஸ் மாடல் விலை ரூ. 22,999, 8 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 24,999 என்றும் 12 ஜிபி + 256 ஜிபி மாடல் விலை ரூ. 27,999 ஆகும்.
Tags:    

Similar News