தொழில்நுட்பம்
5ஜி

இந்தியாவில் 5ஜி உபகரணங்களை உற்பத்தி செய்வதற்கான பணிகளை துவங்கிய ஜியோ

Published On 2021-06-03 10:36 GMT   |   Update On 2021-06-03 10:36 GMT
ரிலையன்ஸ் ஜியோ மற்றும் குவால்காம் நிறுவனங்கள் இணைந்து இந்தியாவில் 5ஜி உபகரணங்களை உற்பத்தி செய்கின்றன.


ஜியோ மற்றும் குவால்காம் நிறுவனங்கள் இணைந்து 5ஜி நெட்வொர்கிங்கை கட்டமைப்பதற்கு தேவையான உபகரணங்களை உற்பத்தி செய்ய இருப்பதாக ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட் தெரிவித்து உள்ளது. முன்னதாக இரு நிறுவனங்கள் இணைந்து 5ஜி சார்ந்து இயங்கும் இன்டர்பேஸ் ஒன்றை உருவாக்கின.

இதன் மூலம் ஜியோ 5ஜி சேவையில் 1Gbps வரையிலான இணைய வேகம் கிடைத்ததாக தெரிவிக்கப்பட்டது. இத்துடன் குவால்காம் நிறுவனம் ஜியோ பிளாட்பார்ம்ஸ்-இல் சுமார் 97 மில்லியன் டாலர்களை முதலீடு செய்தது. ஜியோ மட்டுமின்றி குவால்காம் நிறுவனம் பாரதி ஏர்டெல் நிறுவனத்துடன் இணைந்துள்ளது.



டிஜிட்டல் புரட்சியை ஏற்படுத்துவதில் இந்தியா முன்னோடியாக உள்ளது. டிஜிட்டல் தளங்களை வெளியிடுவது, உள்நாட்டில் உற்பத்தியாகும் அடுத்த தலைமுறை 5ஜி சேவை வெளியிடும் பணிகள் மும்முரமார நடைபெறுகிறது. இதன்மூலம் எல்லா இடங்களிலும் குறைந்த விலையில் 5ஜி சேவையை வழங்கப்பட இருக்கிறது. 

5ஜி தொழில்நுட்பத்தின் மூலம் இந்திய சந்தாதாரர்கள் அதிக டேட்டா ரேட், குறைந்த லேடென்சியில் தகவல் பரிமாற்றம், மேம்பட்ட டிஜிட்டல் அனுபவங்களை பல்வேறு கனெக்டெட் சாதனங்கள், 5ஜி ஸ்மார்ட்போன்கள், லேப்டாப் மற்றும் பல்வேறு சாதனங்கள் மூலம் பெற முடியும்.
Tags:    

Similar News