தொழில்நுட்பம்
டிசோ

டிசோ பிராண்டிங்கில் பீச்சர் போன் வெளியிட ரியல்மி திட்டம்

Published On 2021-06-02 09:53 IST   |   Update On 2021-06-02 09:53:00 IST
ரியல்மி நிறுவனத்தின் டிசோ பிராண்டின் கீழ் புது பீச்சர் போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.


ரியல்மி நிறுவனத்தின் துணை பிராண்டாக டிசோ கடந்த வாரம் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய டிசோ பிராண்டின் கீழ் ஐ.ஒ.டி. எனப்படும் இண்டர்நெட் ஆப் திங்ஸ் சாதனங்களை அறிமுகம் செய்ய இருப்பதாக ரியல்மி அறிவித்து இருந்தது. இதைத் தொடர்ந்து டிசோ கோபாட்ஸ் மற்றும் டிசோ வாட்ச் விவரங்கள் அந்நிறுவன வலைதளத்தில் இடம்பெற்று இருந்தன.

இரண்டும் ரியல்மி பட்ஸ் ஏர் 2 மற்றும் ரியல்மி வாட்ச் சாதனங்களின் ரி-பிராண்டு செய்யப்பட்ட மாடல்கள் என தகவல் வெளியாகி இருந்தது. இந்த நிலையில், டிசோ ஸ்டார் 500 மற்றும் ஸ்டார் 300 பெயரில் புது பீச்சர் போன் மாடல்கள் சீனாவின் 3சி மற்றும் எப்சிசி சான்றுகளை பெற்று இருக்கின்றன. 



டிசோ ஸ்டார் 500 மாடலில் பெரிய திரை, கீபேட் காணப்படுகிறது. இதில் டூயல் சிம் வசதி, டூயல் பேண்ட் 2ஜி கனெக்டிவிட்டி, ஒற்றை பிரைமரி கேமரா, மொபைலின் பின்புறம் டிசோ பிராண்டிங் மற்றும் 1830 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படும் என கூறப்படுகிறது. 

டிசோ ஸ்டார் 300 மாடலில் சிறிய ஸ்கிரீன், கீபேட் காணப்படுகிறது. பின்புறம் ஒற்றை கேமரா, எல்இடி பிளாஷ், பெரிய ஸ்பீக்கர் கிரில், டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ்டி ஸ்லாட், 2500 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படுகிறது.

Similar News