தொழில்நுட்பம்
ஒன்பிளஸ் டீசர்

விரைவில் இந்தியா வரும் புது ஒன்பிளஸ் சாதனம்

Published On 2021-05-27 16:05 IST   |   Update On 2021-05-27 16:05:00 IST
ஒன்பிளஸ் நிறுவனம் இந்தியாவில் சம்மர் வெளியீட்டு நிகழ்வு விரைவில் நடைபெற இருப்பதாக அறிவித்து உள்ளது.


ஒன்பிளஸ் நிறுவனம் இந்தியாவில் சம்மர் வெளியீட்டு நிகழ்வை நடத்த இருக்கிறது. இதற்கான டீசர்களை ஒன்பிளஸ் வெளியிட்டு உள்ளது. இந்த நிகழ்வில் ஒன்பிளஸ் நார்டு புது மாடல் வெளியிடப்படும் என அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இதுகுறித்து ஒன்பிளஸ் எந்த தகவலையும் வழங்கவில்லை.



முன்னதாக ஒன்பிளஸ் நார்டு 2 பற்றிய விவரங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருந்தது. அந்த வகையில், இந்த ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் சம்மர் வெளியீட்டு நிகழ்வில் அறிமுகம் செய்யப்படலாம். புதிய நார்டு ஸ்மார்ட்போன் இந்தியா மட்டுமின்றி சர்வதேச சந்தைகளிலும் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஒன்பிளஸ் நார்டு 2 மாடலில் மீடியாடெக் டிமென்சிட்டி 1200 பிராசஸர், AMOLED டிஸ்ப்ளே, அதிக ரிப்ரெஷ் ரேட், பாஸ்ட் சார்ஜிங் வசதி, 48 எம்பி அல்லது 64 எம்பி பிரைமரி கேமரா சென்சார் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News