தொழில்நுட்பம்
போக்கோ ஸ்மார்ட்போன்

விரைவில் அறிமுகமாகும் போக்கோ 5ஜி ஸ்மார்ட்போன்

Published On 2021-05-12 10:43 GMT   |   Update On 2021-05-12 10:43 GMT
மீடியாடெக் டிமென்சிட்டி பிராசஸர், பிரத்யேக வடிவமைப்பு கொண்ட புது போக்கோ ஸ்மார்ட்போன் உருவாக்கப்படுகிறது.


போக்கோ நிறுவனத்தின் போக்கோ எம்3 ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. சில மாதங்களுக்கு முன் இந்த ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் போக்கோ நிறுவனம் போக்கோ எம்3 ப்ரோ 5ஜி மாடலை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது.

போக்கோ குளோபல் நிறுவன தலைவர் சியாபோ கியூ, விளம்பர பிரிவு தலைவர் அங்குஸ் என் ஆகியோர் இந்த தகவலை உறுதிப்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. முன்னதாக வெளியான தகவல்களில் போக்கோவின் 5ஜி ஸ்மார்ட்போன் ரி-பிராண்டு செய்யப்பட்ட ரெட்மி நோட் 10 5ஜி மாடலாக இருக்கும் என கூறப்பட்டது.



போக்கோ எம்3 ப்ரோ மாடலில் மீடியாடெக் டிமென்சிட்டி பிராசஸர் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த பிராசஸர் ஸ்னாப்டிராகன் 662-ஐ விட வேகமானதாக இருக்கும் என கூறப்படுகிறது. ரெட்மி நோட் 10 5ஜி மாடலில் மீடியாடெக் டிமென்சிட்டி 700 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.

போக்கோ எம்3 ப்ரோ மாடலில் பிரத்யேக வடிவமைப்பு, அதிக ரேம், அதிவேக ஸ்டோரேஜ் மாட்யூல் மற்றும் மூன்று நிறங்களை கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இதன் விலை போக்கோ எக்ஸ்3 என்எப்சி மாடலை போன்றே நிர்ணயிக்கப்படும் என கூறப்படுகிறது.
Tags:    

Similar News