தொழில்நுட்பம்
கொரோனா தடுப்பூசிக்கான முன்பதிவு செய்வது எப்படி?
இந்தியாவில் கொரோனாவைரஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ள விரும்புவோர் ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டியது கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது.
இந்தியாவில் 18 முதல் 44 வயதுடையவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கான முன்பதிவு துவங்கி உள்ளது. இந்தியாவில் தடுப்பூசி முகாம் மூன்று கட்டங்களாக நடைபெறுகிறது.
தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கான முன்பதிவு அவசியமான ஒன்றாகும். முன்பதிவு செய்ய அரசு அங்கீகரித்த அடையாள சான்று வைத்திருக்க வேண்டும். உலகிலேயே அதிகபட்சமாக ஒரே நாளில் அதிக கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள் பட்டியலில் இந்தியா உள்ளது.
இந்த நிலையில், 18 முதல் 44 வயதுடையவர்கள் தடுப்பூசி செலுத்தி கொள்வதற்கான முன்பதிவு துவங்கி இருக்கிறது. முன்பதிவு CoWIN, ஆரோக்கிய சேது மற்றும் UMANG செயலிகளில் நடைபெறுகிறது. முன்பதிவை அடுத்து தகுதி பெற்றவர்களுக்கு மே 1 முதல் தடுப்பூசி செலுத்தப்பட இருக்கிறது.
கொரோனா தடுப்பூசிக்கு முன்பதிவு செய்வது எப்படி?
இந்தியாவில் 18 முதல் 44 வயதுடையவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஆன்லைன் முன்பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முன்பதிவு செய்ய மொபைல் நம்பர் அவசியம் ஆகும். மேலும் ஆதார் அட்டை, ஓட்டுனர் உரிமம், பான் கார்டு, பாஸ்போர்ட், பென்சன் பாஸ்புக், என்பிஆர் ஸ்மார்ட் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை போன்றவைகளில் ஏதேனும் ஒன்று வைத்திருக்க வேண்டும்.
கொரோனா தடுப்பூசிக்கு CoWIN தளத்தில் முன்பதிவு செய்வது எப்படி?
- முதலில் CoWIN வலைதளம் சென்று Register/ Sign in Yourself ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்
- பின் மொபைல் நம்பரை பதிவிட்டு Get OTP பட்டனை க்ளிக் செய்யவும். மொபைல் எண்ணிற்கு OTP வரும்
- மொபைலுக்கு வந்த OTP-யை பதிவிட்டு Verify ஆப்ஷனை க்ளிக் செய்யவும்
- பெயர், பாலினம், பிறந்த தேதி போன்ற விவரங்களை பதிவிட்டு Register பட்டனை க்ளிக் செய்யவும்
- அடுத்து கொரோனா தடுப்பூசிக்கு முன்பதிவு செய்பவரின் பெயருக்கு அடுத்து காணப்படும் Schedule ஆப்ஷனை க்ளிக் செய்யவும்
- இனி உங்களின் அஞ்சல் குறியீட்டை பதிவிட்டு Search ஆப்ஷனை க்ளிக் செய்யவும். அஞ்சல் குறியீட்டு பகுதியில் செயல்படும் தடுப்பூசி மையங்கள் பட்டியல் காண்பிக்கப்படும்
- ஒவ்வொருத்தரின் மாநிலம் மற்றும் மாவட்டத்திற்கு ஏற்ப தடுப்பூசி மையத்தை தேர்வு செய்து கொள்ளலாம்
- தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கான மையம், தேதி, நேரம் உள்ளிட்ட விவரங்களை வழங்கி Confirm பட்டனை க்ளிக் செய்யவும்
ஒருமுறை முன்பதிவு செய்யும் போது அதிகபட்சம் நான்கு குடும்ப உறுப்பினர்களை சேர்க்க முடியும். எனினும், அனைவரின் வயதும் 18 முதல் 44 ஆக இருப்பது அவசியம் ஆகும்.
ஆரோக்கிய சேது செயலி மூலம் கொரோனா தடுப்பூசிக்கு முன்பதிவு செய்வது எப்படி?
- ஆரோக்கிய சேது செயலியை திறக்கவும்
- செயலியின் ஹோம் ஸ்கிரீனில் CoWIN டேபை க்ளிக் செய்யவும்
- அடுத்து Vaccination Registration ஆப்ஷனை க்ளிக் செய்து, மொபைல் நம்பரை பதிவிட்டு OTP பெறவும்
- இனி OTP-யை பதிவிட்டு Verify ஆப்ஷனை க்ளிக் செய்யவும்
- முந்தைய ஆப்ஷனை தொடர்ந்து முன்பதிவு செய்வதற்கான வலைப்பக்கம் திறக்கும்
- இனி CoWIN தளத்தில் முன்பதிவு செய்வதற்கான வழிமுறைகளை பின்பற்றி முன்பதிவை மேற்கொள்ளலாம்
இந்தியாவில் தற்போது இரண்டு கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் போடப்படுகின்றன. ஒன்று ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் உருவாக்கிய கோவாக்சின் மற்றொன்று ஆக்ஸ்போர்டு ஆஸ்ட்ராசென்கா உருவாக்கிய கோவிஷீல்டு ஆகும்.