தொழில்நுட்பம்
சியோமி எம்ஐ 11 எக்ஸ்

ரூ. 29,999 துவக்க விலையில் எம்ஐ 11 எக்ஸ் சீரிஸ் இந்தியாவில் அறிமுகம்

Published On 2021-04-23 11:31 GMT   |   Update On 2021-04-23 11:31 GMT
சியோமி நிறுவனத்தின் எம்ஐ 11 எக்ஸ் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ஏப்ரல் 27 ஆம் தேதி விற்பனைக்கு வருகின்றன.


சியோமி நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் எம்ஐ 11 எக்ஸ் மற்றும் எம்ஐ 11 எக்ஸ் ப்ரோ ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. இரு மாடல்களிலும் 6.67 இன்ச் E4 AMOLED ஸ்கிரீன், 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், 20 எம்பி செல்பி கேமரா மிக சிறிய பன்ச் ஹோலில் வழங்கப்பட்டு இருக்கிறது.

எம்ஐ 11 எக்ஸ் மாடலில் ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர், எம்ஐ 11 எக்ஸ் ப்ரோ மாடலில் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. இரு மாடல்களிலும் 8 ஜிபி ரேம் வழங்கப்பட்டு உள்ளது. எம்ஐ 11 எக்ஸ் மாடலில் 48 எம்பி பிரைமரி கேமரா, எம்ஐ 11 எக்ஸ் ப்ரோ மாடலில் 108 எம்பி பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளன.



இத்துடன் 8 எம்பி அல்ட்ரா வைடு 5 எம்பி டெலிபோட்டோ மேக்ரோ லென்ஸ் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் 4520 எம்ஏஹெச் பேட்டரி, 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் வழங்கப்பட்டுள்ளது. 

சியோமி எம்ஐ 11 எக்ஸ் மற்றும் எம்ஐ 11 எக்ஸ் ப்ரோ மாடல்கள் செலஸ்டியல் சில்வர் மற்றும் லூனார் வைட் நிறங்களில் கிடைக்கிறது. எம்ஐ 11 எக்ஸ் 6 ஜிபி + 128 ஜிபி விலை ரூ. 29,999, 8 ஜிபி + 128 ஜிபி விலை ரூ. 31,999 என்றும் எம்ஐ 11 எக்ஸ் ப்ரோ 8 ஜிபி + 128 ஜிபி விலை ரூ. 39,999, 8 ஜிபி + 256 ஜிபி விலை ரூ. 41,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News