தொழில்நுட்பம்
ஆப்பிள்

ஐமேக், ஐபேட் ப்ரோ மாடல்களை அதிரடியாக அப்டேட் செய்த ஆப்பிள்

Published On 2021-04-21 03:45 GMT   |   Update On 2021-04-20 20:27 GMT
ஆப்பிள் நிறுவனம் தனது ஸ்ப்ரிங் லோடெட் நிகழ்வில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டது. அதன் விவரங்களை பார்ப்போம்.


ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்ப்ரிங் லோடெட் நிகழ்வு விர்ச்சுவல் முறையில் நேற்று (ஏப்ரல் 20) நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஆப்பிள் நிறுவனம் புதிய பாட்காஸ்ட் செயலி, பாட்காஸ்ட் சந்தா முறை உள்ளிட்டவைகளை அறிவித்தது. 

மேலும் ஆப்பிள் டிவி 4கே, யு1 சிப்செட் கொண்ட  ஏர்டேக் டிவைஸ் டிராக்கர், புதிய ஐமேக், ஐபேட் ப்ரோ உள்ளிட்ட சாதனங்களை அறிமுகம் செய்தது. இத்துடன் ஐபோன் 12 மற்றும் ஐபோன் 12 மினி மாடல்களை புதிதாக பர்பில் நிறத்தில் அறிமுகம் செய்து இருக்கிறது.



ஆப்பிள் டிவி 4கே

2017 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஆப்பிள் டிவியின் மேம்பட்ட மாடல் ஸ்ப்ரிங் லோடெட் நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஆப்பிள் டிவி HDR, டால்பி விஷன், ஏ12 பயோனிக் சிப், மேம்பட்ட கிராபிக்ஸ், வீடியோ டிகோடிங், நேவிகேஷன் கண்ட்ரோல் கொண்ட புதிய சிரி ரிமோட் வழங்கப்படுகிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 18,990 என துவங்குகிறது.



ஏர்டேக்

புது யுஐ கொண்டிருக்கும் பாட்காஸ்ட் செயலியுடன் பாட்காஸ்ட் சந்தா எனும் புது சேவையும் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இது பாட்காஸ்ட் அனுபவத்தை மேம்படுத்துகிறது. இத்துடன் ஆப்பிள் உருவாக்கிய யு1 சிப் கொண்ட ஏர்டேக் டிராக்கர் சாதனம் அறிமுகம் செய்யப்பட்டது. 

இந்த டிராக்கர் அல்ட்ரா வைடுபேண்ட் தொழில்நுட்பம், பில்ட்-இன் ப்ளூடூத் போன்ற தொழில்நுட்பங்களை பயன்படுத்தி ஆப்பிள் நிறுவனத்தின் பைண்ட் மை நெட்வொர்க் சேவையை கொண்டு பொருட்களை கண்டறிந்து கொடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் ஏர்டேக் விலை ரூ. 3,190 என்றும் நான்கு ஏர்டேக் வாங்கும் போது ரூ. 10,900 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.



ஐமேக்

புதிய ஐமேக் மாடல் 24 இன்ச் 4.5கே ரெட்டினா டிஸ்ப்ளே, 8 கோர் ஆப்பிள் எம்1 சிப்செட், அதிகபட்சம் 16 ஜிபி மெமரி, 2 டிபி வரையிலான ஸ்டோரேஜ், டச் ஐடி வசதி கொண்ட கீபோர்டு, 1080 பிக்சல் பேஸ் டைம் ஹெச்டி கேமரா போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

புது ஐமேக் மாடல் புளூ, கிரீன், பின்க், சில்வர், எல்லோ, ஆரஞ்சு மற்றும் பர்பில் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 1,19,990 என துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 1,59,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.



ஐபேட் ப்ரோ

இதே நிகழ்வில் ஐபேட் ப்ரோ 11 இன்ச் மற்றும் 12.9 இன்ச் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இரு மாடல்களும் ஆப்பிள் எம்1 பிராசஸர் கொண்டிருக்கின்றன. இதன் 11 இன்ச் மாடலில் பேக்லிட் லிக்விட் ரெட்டினா LED டிஸ்ப்ளேவும், 12.9 இன்ச் மாடலில் மினி LED லிக்விட் ரெட்டினா XDR டிஸ்ப்ளேவும் வழங்கப்பட்டு இருக்கிறது.

இத்துடன் இரு மாடல்களும் 5ஜி கனெக்டிவிட்டி, தண்டர்போல்ட், யுஎஸ்பி டைப் சி போர்ட், 12 எம்பி அல்ட்ரா வைடு ட்ரூடெப்த் செல்பி கேமரா, 12 எம்பி வைடு கேமரா, 10 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, அதிகபட்சம் 16 ஜிபி ரேம், 2 டிபி வரையிலான மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது.

இந்தியாவில் புதிய ஐபேட் ப்ரோ பேஸ் வேரியண்ட் விலை ரூ. 71,900 என துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 2,12,900 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மாடல்கள் ஸ்பேஸ் கிரே மற்றும் சில்வர் நிறங்களில் கிடைக்கிறது. 
Tags:    

Similar News