தொழில்நுட்பம்
சோனி டிவி

சோனி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி இந்தியாவில் அறிமுகம்

Published On 2021-04-17 06:17 GMT   |   Update On 2021-04-17 06:17 GMT
கூகுள் அசிஸ்டண்ட், ஹெச்டிஆர் 10 போன்ற வசதிகள் நிறைந்த புது ஆண்ட்ராய்டு டிவியை சோனி அறிமுகம் செய்துள்ளது.


சோனி நிறுவனம் இந்திய சந்தையில் புது ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவியை அறிமுகம் செய்தது. சோனி 32W830 என அழைக்கப்படும் புது 32 இன்ச் டிவி ஆண்ட்ராய்டு டிவி ஒஎஸ், கூகுள் அசிஸ்டண்ட் வசதி, ஹெச்டிஆர் 10 மற்றும் ஹெச்எல்ஜி பார்மேட்களை இயக்கும் வசதி கொண்டுள்ளது.

இந்தியாவில் 32 இன்ச் அளவில் கிடைக்கும் டிவி மாடல்களில் விலை உயர்ந்த மாடல் இது ஆகும். மேலும் தற்போது கிடைக்கும் மாடல்களில் அதிக சிறப்பம்சங்களை கொண்ட மாடலாகவும் இது இருக்கிறது. இதில் ஹெச்டி ரெடி எல்இடி டிஸ்ப்ளே, 60 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் வழங்கப்பட்டு இருக்கிறது.



இந்த டிவி கூகுளின் ஆண்ட்ராய்டு டிவி ஒஎஸ் கொண்டுள்ளது. மேலும் இதில் கூகுள் அசிஸ்டண்ட் வசதியும், குரோம்காஸ்ட் வசதியும் வழங்கப்பட்டு உள்ளது. 16 ஜிபி மெமரி கொண்டிருக்கும் சோனி டிவியில் 20 வாட் ஸ்டீரியோ ஸ்பீக்கர் சிஸ்டம், 3 ஹெச்டிஎம்ஐ போர்ட், 2 யுஎஸ்பி போர்ட், 3.5 எம்எம் ஆடியோ அவுட்புட், ப்ளூடூத் 4.2 உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

புதிய சோனி 32W830 மாடல் விலை ரூ. 31,990 ஆகும். இது ஆன்லைன் மற்றும் ஆப்லைன் விற்பனை மையங்களில் கிடைக்கிறது. 
Tags:    

Similar News