தொழில்நுட்பம்
ஐகூ ஸ்மார்ட்போன்

ஸ்னாப்டிராகன் 870 பிராசஸருடன் விரைவில் இந்தியா வரும் ஐகூ ஸ்மார்ட்போன்

Published On 2021-04-10 07:13 GMT   |   Update On 2021-04-10 07:13 GMT
ஐகூ பிராண்டின் புது ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கின்றன.


ஐகூ 7 லெஜண்ட் மற்றும் ஐகூ நியோ 5 மாடல்கள் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. இந்த நிலையில், பல்வேறு விலை பட்டியலில் வித்தியாசமான ஐகூ ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக இந்தியாவுக்கான ஐகூ பிராண்டு தலைவர் ககன் அரோரா தெரிவித்து இருக்கிறார்.

இதைத் தொடர்ந்து ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர் கொண்ட புது ஐகூ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட ஐகூ நியோ 5 மாடலிலும் இதே பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. 



அந்த வகையில் புதிய மாடல் ஐகூ நியோ 5 மாடலாக இருக்குமா அல்லது முற்றிலும் புது ஸ்மார்ட்போனாக இருக்குமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இந்திய சந்தையில் ஐகூ நியோ 5 மாடல் ரி-பிராண்டு செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

சிறப்பம்சங்களை பொருத்தவரை ஐகூ 5 நியோ மாடலில் பன்ச் ஹோல் டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், ஸ்னாப்டிராகன் 870 பிளஸ் பிராசஸர், 8 ஜிபி ரேம், 66 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.

புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, OIS, LED பிளாஷ், 13 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்பி மேக்ரோ, 2 எம்பி மோனோ சென்சார் உள்ளது. இத்துடன் 16 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 4400 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படுகிறது.
Tags:    

Similar News