தொழில்நுட்பம்
லின்க்டுஇன்

சுமார் 50 கோடி பயனர் விவரங்கள் லீக் ஆன விவகாரம் - லின்க்டுஇன் விளக்கம்

Published On 2021-04-09 16:46 IST   |   Update On 2021-04-09 16:46:00 IST
50 கோடி பேரின் தனிப்பட்ட விவரங்கள் இணையத்தில் விற்பனைக்கு வந்த சம்பவம் குறித்து லின்க்டுஇன் விளக்கம் அளித்துள்ளது.


பேஸ்புக் சேவையை பயன்படுத்தும் சுமார் 53.3 கோடி பயனர் விவரங்கள் இணையத்தில் லீக் ஆன சம்பவம் சமீபத்தில் அரங்கேறி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தற்போது லின்க்டுஇன் பயனர் விவரங்களும் இணையத்தில் வெளியாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி சுமார் 50 கோடி பயனாளிகளின் விவரங்கள் இணையத்தில விற்கப்படுவதாக கூறப்படுகிறது.



பயனாளிகள் பெயர், லின்க்டுஇன் ஐடி, மொபைல் போன் நம்பர், பாலினம், சமூக வலைதள அக்கவுண்ட்களின் ஹைப்பர்லின்க் உள்ளிட்ட விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருப்பதாக கூறப்படுகிறது. இவை அனைத்தும் மிக அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட இருக்கின்றன.

`இணையத்தில் விற்பனைக்கு வந்துள்ள தகவல்கள் பல்வேறு வலைதளங்கள் மற்றும் நிறுவனங்களிடம் இருந்து பெறப்பட்டுள்ளன. இவற்றில் பயனர் விவரங்கள் பார்க்க முடிகிறது. எனினும், இவை எதுவும் லின்க்டுஇன் மூலம் வெளியாகவில்லை.' என லின்க்டுன் தெரிவித்து உள்ளது.

Similar News