தொழில்நுட்பம்
நோக்கியா இயர்போன்

ரூ. 1999 துவக்க விலையில் புது நோக்கியா இயர்போன் இந்தியாவில் அறிமுகம்

Published On 2021-04-06 10:49 GMT   |   Update On 2021-04-06 10:50 GMT
நோக்கியாவின் புதிய ப்ளூடூத் ஹெட்செட் மற்றும் வயர்லெஸ் இயர்போன் மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டன.


நோக்கியா ப்ளூடூத் ஹெட்செட் T2000 மற்றும் ட்ரூ வயர்லெஸ் இயர்போன் ANC T3100 ப்ளிப்கார்ட் அறிமுகம் செய்து இருக்கிறது. மெல்லிய மற்றும் அசத்தலான வடிவமைப்பில் பிரீமியம் பொருட்களை வாங்க விரும்புவோருக்காக புதிய ஆடியோ சாதனங்கள் உருவாக்கப்பட்டு இருக்கின்றன.

நோக்கியா ப்ளூடூத் ஹெட்செட் T2000 குவால்காம் QCC3034 ப்ளூடூத் ஆடியோ சிப்செட் மற்றும் குவால்காம் cVc எக்கோ கேன்சலேஷன் மற்றும் நாய்ஸ் சப்ரெஷ் தொழில்நுட்பம் கொண்டுள்ளது. இவை 24-பிட் ஹெச்டி ப்ளூடூத் ஆடியோ வசதியை வழங்குகின்றன. இந்த நெக்பேண்ட் ஹெட்செட் ரேபிட் சார்ஜிங் வசதி உள்ளது. இதனால் பத்து நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 9 மணி நேர பிளேபேக் வழங்குகிறது. 



நோக்கியா ட்ரூ வயர்லெஸ் இயர்போன் ANC T3110 ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் மற்றும் IPX7 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டுள்ளது. இரு ஹெட்போன்களும் ப்ளூடூத் 5.1 கனெக்டிவிட்டி கொண்டுள்ளன. 

புதிய நோக்கியா ப்ளூடூத் ஹெட்செட் T2000 விலை ரூ. 1,999 என்றும் வயர்லெஸ் இயர்போன் ANC T3110 விலை ரூ. 3,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இரு மாடல்களும் ப்ளிப்கார்ட் தளத்தில் ஏப்ரல் 9 ஆம் தேதி முதல் விற்பனை செய்யப்படுகின்றன.
Tags:    

Similar News