தொழில்நுட்பம்
ஒன்பிளஸ் வாட்ச்

புது அப்டேட் மூலம் ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே வசதி பெறும் ஒன்பிளஸ் வாட்ச்

Published On 2021-04-06 04:14 GMT   |   Update On 2021-04-06 04:14 GMT
இந்தியாவில் பிரீமியம் விலையில் அறிமுகம் செய்யப்பட்ட ஒன்பிளஸ் வாட்ச் ஒடிஏ அப்டேட் மூலம் ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே வசதி பெறுகிறது.


ஒன்பிளஸ் வாட்ச் மாடலில் விரைவில் ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே வசதி வழங்கப்படுகிறது. இந்த வசதி ஒவர் தி ஏர் அப்டேட் மூலம் வழங்கப்பட இருக்கிறது. இந்திய சந்தையில் புதிய ஒன்பிளஸ் வாட்ச் மார்ச் 23 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இந்த வாட்ச் ரூ. 14,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.



அதிகம் விரும்பப்படும் அம்சமாக இருந்தாலும், ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே வசதி ஸ்மார்ட்வாட்ச் சார்ஜிங் பயன்பாட்டை 50 சதவீதம் வரை எடுத்துக் கொள்ளும். ஒன்பிளஸ் அறிமுகம் செய்திருக்கும் முதல் ஸ்மார்ட்வாட்ச் என்ற வகையில் இது பல்வேறு அம்சங்களை கொண்டிருக்கிறது.

ஒன்பிளஸ் வாட்ச் மாடல் அந்நிறுவனத்தின் புதிய பிளாக்ஷிப் மாடல்களான ஒன்பிளஸ் 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுடன் அறிமுகம் செய்யப்பட்டது. பெரும்பாலான பயனர்கள் ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே வசதியை வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர். விரைவில் இந்த கோரிக்கை ஒடிஏ அப்டேட் மூலம் நிறைவேற்றப்படும் என ஒன்பிளஸ் தெரிவித்து உள்ளது.
Tags:    

Similar News