தொழில்நுட்பம்
அமேஸ்பிட் பிப் யு ப்ரோ

ரூ. 5 ஆயிரம் பட்ஜெட்டில் புது ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் செய்யும் அமேஸ்பிட்

Published On 2021-04-03 11:02 IST   |   Update On 2021-04-03 11:02:00 IST
அமேஸ்பிட் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலை விரைவில் அறிமுகம் செய்வதாக அறிவித்து இருக்கிறது.


ஸ்மார்ட் அணியக்கூடிய பிராண்டான அமேஸ்பிட் இந்திய சந்தையில் புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய ஸ்மார்ட்வாட்ச் ரூ. 5 ஆயிரம் பட்ஜெட்டில் கிடைக்கும் என அமேஸ்பிட் தெரிவித்து உள்ளது.

அமேஸ்பிட் புதிய ஸ்மார்ட்வாட்ச் 1.43 இன்ச் ஹெச்டி டிஎப்டி-எல்சிடி கலர் டிஸ்ப்ளே, 2.5டி கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு, 50-க்கும் அதிக வாட்ச் பேஸ்களை தேர்வு செய்யும் வசதி வழங்கப்படுகிறது. இத்துடன் பயனர்கள் சொந்த புகைப்படத்தை பேக்கிரவுண்டாக செட் செய்து கொள்ளும் வசதியும் வழங்கப்படுகிறது.



அமேஸ்பிட் பிப் யு ப்ரோ மாடலில் பில்ட்-இன் அலெக்சா மற்றும் ஜிபிஎஸ் உள்ளது. இந்த அம்சம் கொண்டு பயனர்கள் வாட்ச் உடன் உரையாடி மியூசிக், அலாரம், நோட்டிபிகேஷன் என பல அம்சங்களை இயக்க முடியும். மேலும் 60-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட் உள்ளது. 

இந்த ஸ்மார்ட்வாட்ச் செயலியுடன் இணைந்து கொண்டு உடல்நலன் சார்ந்த விவரங்களை வழங்குகிறது. இது பயனரின் அன்றாட நடவடிக்கைகளை துல்லியமாக டிராக் செய்து அதுபற்றிய தகவல்களை வழங்கும். இத்துடன் குறுந்தகவல், மின்னஞ்சல் உள்ளிட்டவைகளுக்கு நோட்டிபிகேஷன் வழங்குகிறது.

அமேஸ்பிட் பிப் யு ப்ரோ ஸ்மார்ட்வாட்ச் அமேசான் தளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இது பிளாக், பின்க் மற்றும் கிரீன் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது.

Similar News