தொழில்நுட்பம்
மோட்டோ ஜி50

மிட்-ரேன்ஜ் 5ஜி மற்றும் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்

Published On 2021-03-26 16:40 IST   |   Update On 2021-03-26 16:40:00 IST
மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ ஜி50 மற்றும் ஜி100 ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து இருக்கிறது.

மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ ஜி100 மற்றும் மோட்டோ ஜி50 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. மோட்டோ ஜி50 5ஜி மாடலில் 6.5 இன்ச் ஹெச்டி பிளஸ் மேக்ஸ் விஷன் 90 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 480 பிராசஸர், 4 ஜிபி ரேம், அதிகபட்சம் 128 ஜிபி மெமரி கொண்டுள்ளது.

புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி டெப்த் கேமரா, 5 எம்பி மேக்ரோ லென்ஸ் மற்றும் 13 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது. ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ் கொண்டிருக்கும் மோட்டோ ஜி50 5ஜி மாடலில் ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட், பின்புறம் கைரேகை சென்சார், ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட், டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, யுஎஸ்பி டைப் சி உள்ளது. 

இத்துடன் 5000 எம்ஏஹெச் பேட்டரி, 15 வாட் சார்ஜிங் வழங்கப்பட்டு இருக்கிறது. மோட்டோ ஜி50 5ஜி மாடல் ஸ்டீல் கிரே, அக்வா கிரீன் நிறங்களில் கிடைக்கிறது. சர்வதேச சந்தையில் இதன் விலை 294 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 21,340 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 



மோட்டோ ஜி100 பிளாக்ஷிப் மாடலில் 6.7 இன்ச் FHD+90 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 870 5ஜி பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 16 எம்பி + 8 எம்பி என இரண்டு செல்பி கேமராக்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. 

புகைப்படங்களை எடுக்க 64 எம்பி பிரைமரி கேமரா, 16 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 2 எம்பி டெப்த் மற்றும் ToF சென்சார் உள்ளது. இதன் பக்கவாட்டில் கைரேகை சென்சார் பவர் பட்டனிலேயே பொருத்தப்பட்டு இருக்கிறது. இத்துடன் 5000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 20 வாட் டர்போ சார்ஜிங் வசதி உள்ளது.

மோட்டோ ஜி100 ஸ்மார்ட்போன் ஐடிசென்ட் ஓசன், ஐடிசென்ட் ஸ்கை என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 588 
டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 42,770 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

Similar News