தொழில்நுட்பம்
ஏர்டெல்

ஜனவரியில் அந்த விஷயத்தில் முன்னேறிய ஏர்டெல்

Published On 2021-03-19 15:58 IST   |   Update On 2021-03-19 15:58:00 IST
இந்திய டெலிகாம் சந்தையில் ஏர்டெல் நிறுவனம் அந்த விஷயத்தில் அசத்தி இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


மத்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய், ஜனவரி மாதத்திற்கான டெலிகாம் சந்தாதாரர்கள் பற்றிய அறிக்கையை வெளியிட்டு உள்ளது. அதன்படி ஜனவரி 2021 மாதத்தில் ஏர்டெல் நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோவை விட 300 மடங்கு அதிக வயர்லெஸ் சந்தாதாரர்களை இணைத்துள்ளது. 

ஜனவரி மாதத்தில் ஏர்டெல் நிறுவனம் மொத்தம் 58.9 லட்சம் சந்தாதாரர்களை இணைத்துள்ளது. இதே மாதத்தில் ஜியோ நிறுவனத்தில் 19.5 லட்சம் வாடிக்கையாளர்கள் இணைந்துள்ளனர். புதிய வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்காத நிலையிலும், டெலிகாம் சந்தையில் ஜியோ தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.



டிராய் வெளியிட்டு இருக்கும் தற்போதைய அறிக்கையின் படி ஜியோ சேவையை சுமார் 41.073 கோடி வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இது ஒட்டுமொத்த சந்தையில் 35.30 சதவீதம் ஆகும். ஏர்டெல் நிறுவனம் 34.460 கோடி பயனர்களையும், வி சேவையை 28.596 கோடி பேரும் பயன்படுத்தி வருகின்றனர். 

பி.எஸ்.என்.எல். நிறுவன சேவையை சுமார் 11.869 கோடி  பேர் பயன்படுத்தி வருகின்றனர். வளர்ச்சி விகிதத்தில் ஏர்டெல் 1.74 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து முதலிடத்தில் உள்ளது. இதைத் தொடர்ந்து ஜியோ 0.48 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்து உள்ளது. 

Similar News