தொழில்நுட்பம்
மோட்டோ ஜி10 பவர் மற்றும் மோட்டோ ஜி30

விரைவில் இந்தியா வரும் இரு மோட்டோ ஸ்மார்ட்போன்கள்

Published On 2021-03-05 11:21 GMT   |   Update On 2021-03-05 11:21 GMT
மோட்டோரோலா நிறுவனம் இரண்டு மோட்டோ ஜி சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் அறிமுக விவரங்களை வெளியிட்டுள்ளது.


மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ ஜி10 பவர் மற்றும் மோட்டோ ஜி30 ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் மார்ச் 9 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது. மற்ற மோட்டோ சாதனங்களை போன்றே புதிய ஸ்மார்ட்போன்களும் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கின்றன.

முன்னதாக மோட்டோ ஜி10 பவர் மற்றும் மோட்டோ ஜி30 ஸ்மார்ட்போன்கள் ஐரோப்பிய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. மோட்டோ ஜி10 பவர் மாடலில் 6.5 இன்ச் ஹெச்டி பிளஸ் ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 460 பிராசஸர், 4 ஜிபி ரேம், 48 எம்பி குவாட் கேமரா சென்சார்கள் வழங்கப்படுகிறது.



மோட்டோ ஜி30 மாடலில் 6.5 இன்ச் ஹெச்டி பிளஸ் 90 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 662 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜிபி ரேம், 64 எம்பி குவாட் கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளன. 

இரு மாடல்களிலும் கைரேகை சென்சார், வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. மோட்டோ ஜி30 மாடலில் 5000 எம்ஏஹெச் பேட்டரியும், மோட்டோ ஜி10 பவர் மாடலில் 6000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டுள்ளன. 
Tags:    

Similar News