தொழில்நுட்பம்
ஜியோ

அதிரடி பலன்களுடன் 2021 ஜியோ போன் சலுகையை அறிவித்த ரிலையன்ஸ் ஜியோ

Published On 2021-02-27 07:42 GMT   |   Update On 2021-02-27 07:42 GMT
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்திய சந்தையில் ஜியோ போன் 2021 சலுகையை அறிவித்து இருக்கிறது.


ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் ஜியோ போன் 2021 சலுகை இந்திய சந்தையில் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த சலுகை அன்லிமிடெட் வாய்ஸ் கால், 24 மாதங்களுக்கு டேட்டா உள்ளிட்டவைகளை ரூ. 1999 விலையில் வழங்குகிறது. இத்துடன் இதே சலுகைகளை 12 மாதங்களுக்கு ரூ. 1,499 விலையிலும் வழங்கப்படுகிறது.

இந்தியா முழுக்க தற்சமயம் 10 கோடிக்கும் அதிகமானோர் ஜியோ போன் பயன்படுத்தி வருகின்றனர். இந்த எண்ணிக்கையை அதிகப்படுத்தி நாடு முழுக்க 30 கோடி பயனர்களை அடைய ரிலையன்ஸ் ஜியோ புதிய 2021 சலுகையை அறிவித்து இருக்கிறது.

ஜியோ போன் 2021 சலுகையை ரூ. 1999 விலையில் பெறும் வாடிக்கையாளர்கள் ஜியோ போன், 24 மாதங்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால், டேட்டா உள்ளிட்டவற்றை பயன்படுத்த முடியும். மேலும் இதில் மாதம் 2 ஜிபி டேட்டா 24 மாதங்களுக்கும் வழங்கப்படுகிறது. மாதாந்திர 2 ஜிபி டேட்டா தீர்ந்ததும் டேட்டா வேகம் 64Kbps என குறைக்கப்படுகிறது.



24 மாதங்களுக்கான சலுகை வேண்டாம் எனில், வாடிக்கையாளர்கள் 12 மாதங்களுக்கான சலுகையை ரூ. 1,499 விலையில் அதே பலன்களுடன் பெற முடியும். ஏற்கனவே ஜியோபோன் வைத்திருப்போர் 12 மாதங்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால், டேட்டா (மாதம் 2 ஜிபி டேட்டா) உள்ளிட்டவைகளை ரூ. 749 விலையில் பெற முடியும். 

புதிய ஜியோ போன் 2021 சலுகை மார்ச் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. முன்னதாக 2017 ஜூலை மாத வாக்கில் ரிலையன்ஸ் ஜியோவின் முதல் 4ஜி வசதி கொண்ட ஸ்மார்ட் பீச்சர் போன் மாடலாக ஜியோ போன் அறிமுகம் செய்யப்பட்டது. கை ஒஎஸ், 2.4 இன்ச் டிஸ்ப்ளே, 2 எம்பி பிரைமரி கேமரா, 0.3 எம்பி செல்பி கேமரா உள்ளிட்டவை ஜியோ போனின் முக்கிய அம்சங்கள் ஆகும்.
Tags:    

Similar News