தொழில்நுட்பம்
சாம்சங் ஸ்மார்ட்போன்

விரைவில் இந்தியா வரும் குறைந்த விலை சாம்சங் 5ஜி ஸ்மார்ட்போன்

Published On 2021-02-26 08:32 GMT   |   Update On 2021-02-26 08:32 GMT
சாம்சங் நிறுவனத்தின் குறைந்த விலை 5ஜி ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.


சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி ஏ32 5ஜி ஸ்மார்ட்போனினை இம்மாத துவக்கத்தில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது. பின் இதன் 4ஜி வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டது. இது அந்நிறுவனத்தின் குறைந்தவிலை 5ஜி ஸ்மார்ட்போனாக இருக்கிறது. சர்வதேச வெளியீட்டை தொடர்ந்து கேலக்ஸி ஏ32 5ஜி ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகமாக இருக்கிறது. 

இதனை உறுதிப்படுத்தும் வகையில், கேலக்ஸி ஏ32 5ஜிஸ்மார்ட்போன் சாம்சங் இந்தியா வலைதளத்தில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது. மேலும் புதிய ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் சாம்சங் நிறுவனத்தின் குறைந்த விலை 5ஜி மாடல் என தெரிகிறது. இந்தியாவில் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் 5ஜி சேவையை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கின்றன.



சிறப்பம்சங்களை பொருத்தவரை சாம்சங் கேலக்ஸி ஏ32 5ஜி ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் இன்பினிட்டி வி ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே, 2 ஜிகாஹெர்ட்ஸ் மீடியாடெக் டிமென்சிட்டி 720 பிராசஸர், 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி, 128 ஜிபி மெமரி வேரியண்ட்களில் கிடைக்கிறது.

புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 5 எம்பி மேக்ரோ கேமரா, 2 எம்பி டெப்த் சென்சார், 13 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 5000 எம்ஏஹெச் பேட்டரி, 15 வாட் பாஸ்ட் சார்ஜிங், பக்கவாட்டில் கைரேகை சென்சார் உள்ளிட்டவை வழங்கப்பட்டு உள்ளது.

சர்வதேச சந்தையில் சாம்சங் கேலக்ஸி ஏ32 5ஜி 64 ஜிபி வேரியண்ட் விலை 279 யூரோக்கள், இந்திய மதிப்பில் ரூ. 25 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்திய சந்தையிலும் இந்த ஸ்மார்ட்போனின் விலை குறைவாகவே நிர்ணயம் செய்யப்படலாம் என தெரிகிறது.
Tags:    

Similar News