தொழில்நுட்பம்
ரெட்மி நோட் 10 சீரிஸ் டீசர்

108 எம்பி கேமராவுடன் வெளியாகும் ரெட்மி நோட் 10 சீரிஸ்

Published On 2021-02-26 04:25 GMT   |   Update On 2021-02-26 04:25 GMT
சியோமியின் ரெட்மி நோட் 10 சீரிஸ் ஸ்மார்ட்போனின் மாடல் ஒன்று 108 எம்பி கேமரா கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.


சியோமியின் ரெட்மி பிராண்டு தனது ரெட்மி நோட் 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை மார்ச் 4 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்நிலையில், புதிய ஸ்மார்ட்போன் சீரிஸ் மாடலில் 108 எம்பி கேமரா வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில் சாம்சங் நிறுவனத்தின் 108 எம்பி HM2 சென்சார் வழங்கப்படலாம் என தெரிகிறது. முன்னதாக சியோமி வெளியிட்ட எம்ஐ 10ஐ மற்றும் ரெட்மி கே40 ப்ரோ பிளஸ் மாடல்களிலும் இதே சென்சார் வழங்கப்பட்டு இருந்தது. புதிய நோட் 10 சீரிஸ் துவக்க மாடலில் 48 எம்பி சென்சார் வழங்கப்படலாம்.



முந்தைய டீசர்களில் புதிய ஸ்மார்ட்போன் மிக மென்மையான டிஸ்ப்ளே அனுபவம், வழக்கமான ரெட்மி போன்களில் இருப்பதை விட இருமடங்கு அதிக பிரைட்னஸ், ஸ்னாப்டிராகன் பிராசஸர், பக்கவாட்டில் கைரேகை சென்சார், மிக குறைந்த எடை, பெரிய பேட்டரி, பாஸ்ட் சார்ஜிங் வசதி, சிறப்பான ஹேப்டிக் கண்ட்ரோல் உள்ளிட்டவை வழங்கப்பட இருப்பதை ரெட்மி தெரிவித்து இருக்கிறது.

ரெட்மி நோட் 10 சீரிஸ் அமேசான், எம்ஐ மற்றும் எம்ஐ ஆப்லைன் ஸ்டோர்களில் விற்பனை செய்யப்பட இருக்கின்றன.
Tags:    

Similar News