108 எம்பி கேமரா கொண்ட ரியல்மி 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் விரைவில் அறிமுகமாக இருக்கின்றன.
108 எம்பி கேமராவுடன் விரைவில் இந்தியா வரும் ரியல்மி 8 சீரிஸ்
பதிவு: பிப்ரவரி 25, 2021 16:50
ரியல்மி 8 டீசர்
இந்தியாவில் ரியல்மி 8 சீரிஸ் டீசர் வெளியிடப்பட்டு இருக்கிறது. இதனை ரியல்மி இந்தியா தலைவர் மாதவ் சேத் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் அக்கவுண்டில் பதிவிட்டு இருந்தார். முன்னதாக ரியல்மி நார்சோ 30 ப்ரோ மற்றும் நார்சோ 30ஏ ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டன.
மாதவ் சேத் ட்விட்டர் பதிவில் ரியல்மி 8 குறிப்பிடப்படவில்லை என்றாலும், #InfiniteLeapWith8 எனும் ஹேஷ்டேக் இடம்பெற்று இருக்கிறது. இதை கொண்டு புதிய டீசர் ரியல்மி 7 மாடலின் மேம்பட்ட வெர்ஷன் வெளியாவதையே குறிக்கும் வகையில் அமைந்து உள்ளது.
மேலும் புதிய ஸ்மார்ட்போனில் 108 எம்பி கேமரா சென்சார் வழங்கப்படலாம் என்பதையும் மாதவ் சேத் தனது பதிவில் குறிப்பிட்டு இருக்கிறார். இதுபற்றிய தகவலை நாளை அறிவிப்பதாக அவர் மேலும் தெரிவித்தார். எனினும், ரியல்மி 8 சீரிஸ் வெளியீடு பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.
முன்னதாக வெளியான தகவல்களில் புதிய ரியல்மி 8 ஸ்மார்ட்போன் மீடியாடெக் எம்டி6853 பிராசஸர், 8 ஜிபி ரேம், 6.5 இன்ச் டிஸ்ப்ளே, 64 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி சென்சார், 2 எம்பி + 2 எம்பி கேமரா, 16 எம்பி செல்பி கேமரா மற்றும் 5000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படலாம்.
Related Tags :