தொழில்நுட்பம்
எம்ஐ போர்டபில் ப்ளூடூத் ஸ்பீக்கர் மற்றும் நெக்பேண்ட் ப்ளூடூத் இயர்போன்

புதிய ப்ளூடூத் ஸ்பீக்கர், ANC வசதியுடன் ப்ளூடூத் இயர்போன் அறிமுகம் செய்த சியோமி

Published On 2021-02-22 16:15 IST   |   Update On 2021-02-22 16:43:00 IST
சியோமி நிறுவனம் புதிய ப்ளூடூத் ஸ்பீக்கர் மற்றும் ப்ளூடூத் இயர்போன் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது.


சியோமி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய எம்ஐ போர்டபில் ப்ளூடூத் ஸ்பீக்கர் மற்றும் நெக்பேண்ட் ப்ளூடூத் இயர்போன் ப்ரோ மாடல்களை அறிமுகம் செய்தது. 16 வாட் திறன் கொண்ட ப்ளூடூத் ஸ்பீக்கரில் ப்ளூடூத் 5.0, டூயல் EQ மோட், மைக்ரோபோன், வாய்ஸ் அசிஸ்டண்ட் போன்ற வசதிகள் வழங்கப்பட்டு உள்ளன.

இத்துடன் IPX7 வாட்டர் ப்ரூப் வசதி, அதிகபட்சம் 13 மணி நேர பிளேபேக் வழங்குகிறது. பேப்ரிக் டிசைன் கொண்டிருக்கும் புதிய ஸ்பீக்கர் கைகளில் இருந்து நழுவாமல் இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதில் 2600 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் யுஎஸ்பி டைப் சி சார்ஜிங் வழங்கப்பட்டு உள்ளது.



புதிய எம்ஐ நெக்பேண்ட் ப்ளூடூத் இயர்போன் ப்ரோ ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி கொண்டுள்ளது. இது சியோமியின் முதல் ANC வசதி கொண்ட நெக்பேண்ட் இயர்போன் ஆகும். மேலும் இதில் அழைப்புகளுக்கு ENC வசதி, ப்ளூடூத் 5, 10எம்எம் பேஸ் டிரைவர், லோ-லேடென்சி ஆடியோ மற்றும் 20 மணி நேர பேட்டரி பேக்கப் கொண்டிருக்கிறது.

இத்துடன் மேக்னெடிக் இயர்பட்ஸ், ஆன்டி-வாக்ஸ் இயர்டிப்கள் வழங்கப்பட்டுள்ளன. வாய்ஸ் அசிஸ்டண்ட், வால்யூம்/மியூசிக் மற்றும் அழைப்புகளை ஏற்க/நிராகரிக்கும் வசதி கொண்ட பட்டன் வழங்கப்பட்டு இருக்கின்றன. இந்த இயர்போனில் IPX5 தர ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் வசதி மற்றும் 150 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் யுஎஸ்பி சார்ஜிங் போர்ட் வழங்கப்பட்டு இருக்கிறது.

புதிய எம்ஐ போர்டபில் ப்ளூடூத் ஸ்பீக்கர் பிளாக் மற்றும் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 2499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை மார்ச் 1 ஆம் தேதி முதல் அமேசானில் துவங்குகிறது. எம்ஐ நெக்பேண்ட் ப்ளூடூத் இயர்போன் ப்ரோ மாடல் பிளாக் மற்றும் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 1799 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

Similar News