தொழில்நுட்பம்
ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்

புது அப்டேட் பெறும் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்கள்

Published On 2021-01-21 13:21 IST   |   Update On 2021-01-21 13:21:00 IST
ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு புதிய ஒஎஸ் அப்டேட் வழங்கப்படுகிறது.


ஒன்பிளஸ் நிறுவனம் தனது ஒன்பிளஸ் 7 மற்றும் 7டி சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கு ஆக்சிஜன் ஒஎஸ்11 அப்டேட் வழங்க துவங்கி இருக்கிறது. முன்னதாக இந்த அப்டேட்டில் குறைகள் இருந்த நிலையில், தற்சமயம் அவை சரி செய்யப்பட்டு இருக்கலாம் என தெரிகிறது.

கடந்த ஆண்டு ஆக்சிஜன் ஒஎஸ்11 ஒன்பிளஸ் 8 சீரிஸ் மாடல்களுக்கு வெளியிடப்பட்டது. அந்த வரிசையில் தற்சமயம் ஒன்பிளஸ் 7 மற்றும் 7டி சீரிஸ் மாடல்களுக்கு இந்த அப்டேட் வழங்கப்படுகிறது. தற்சமயம் பீட்டா வெர்ஷன் வெளியிடப்பட்டு இருக்கிறது. இதைத் தொடர்ந்து ஸ்டேபில் வெர்ஷன் வெளியிடப்படலாம்.

ஓபன் பீட்டா அப்டேட் என்பதால் இதில் ஏராளமான குறைகள் இருக்கலாம் என்பதால், அன்றாடம் பயன்படுத்தும் ஸ்மார்ட்போனில் இதனை இன்ஸ்டால் செய்வது பரிந்துரைக்கப்பட இயலாது. ஸ்மார்ட்போன்களை அப்டேட் செய்யும் முன் அதில் உள்ள தரவுகளை பேக்கப் செய்வது நல்லது.

Similar News