தொழில்நுட்பம்
எல்ஜி ரோலபில் டிவி

சிஇஎஸ் 2021 நிகழ்வில் எல்ஜியின் புதிய ரோலபில் டிவி அறிமுகம்

Published On 2021-01-12 07:52 GMT   |   Update On 2021-01-12 07:52 GMT
எல்ஜி நிறுவனத்தின் புதிய ரோலபில் டிவி சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.


எல்ஜி நிறுவனம் டிரான்ஸ்பேரன்ட் 55-இன்ச் OLED டிவியை அறிமுகம்  செய்து இருக்கிறது. ரோலபில் டிவி என்பதால் இதன் ஸ்கிரீன் தேவைப்படும் போது முழுமையாக வெளியில் வரும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

இந்த டிவி 40 சதவீத டிரான்ஸ்பேரன்சி தொழில்நுட்பம் கொண்டுள்ளது. இந்த டிவியின் பேனலில் பில்ட்-இன் ஸ்பீக்கர்கள் இருப்பதாக எல்ஜி தெரிவித்து உள்ளது. இந்த டிவியினை பயனர்கள் வீட்டின் எந்த பகுதிக்கும் கொண்டு சென்று பயன்படுத்த முடியும்.

டிரான்ஸ்பேரன்ட் OLED தொழில்நுட்பம் அன்றாட வாழ்வில் பல்வேறு நிலைகளில் பயன்படுத்தும் வசதியை வழங்குகிறது. மேலும் இது அடுத்த தலைமுறை டிஸ்ப்ளேவாக உருமாறி தற்போதைய டிஸ்ப்ளே நுட்பத்திற்கு மாற்றாக அமையும், என எல்ஜி டிஸ்ப்ளே நிறுவன மூத்த துணை தலைவர் மற்றும் வர்த்தக பிரிவு தலைவர் ஜாங்-சன் பார்க் தெரிவித்தார்.

ஒவ்வொரு நாட்டின் கொரோனாதொற்று அபாயம் காரணமாக புதிய எல்ஜி சிக்னேச்சர் OLED ஆர் டிவி வெளியீட்டு தேதி இதுவரை முடிவு செய்யப்படவில்லை என எல்ஜி நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. 

புதிய 65-இன்ச் டிவியின் ஸ்கிரீன் சிறு பெட்டியில் இருந்து மேல்புறமாக சுழன்று எழும்பும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இது ஒவ்வொருத்தர் வீட்டின் உள்புறத்திற்கு ஏற்ப பல்வேறு விதங்களில் பயன்படுத்திக் கொள்ளும் வசதியை வழங்குகிறது.
Tags:    

Similar News