தொழில்நுட்பம்
2021 மோட்டோ ஜி ஸ்டைலஸ்

2021 சிஇஎஸ் - நான்கு புது ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த மோட்டோரோலா

Published On 2021-01-11 07:43 GMT   |   Update On 2021-01-11 07:43 GMT
2021 சிஇஎஸ் நிகழ்வில் நான்கு புது ஸ்மார்ட்போன்களை மோட்டோரோலா அறிமுகம் செய்து இருக்கிறது.


2021 சிஇஎஸ் (சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழா) நிகழ்வில் மோட்டோரோலா நிறுவனம் புது ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது. 

அதன்படி மோட்டோ ஜி சீரிசில் 2021 மோட்டோ ஜி பிளே, மோட்டோ ஜி பவர், மோட்டோ ஜி ஸ்டைலஸ் போன்ற மாடல்கள் இடம்பெற்று இருக்கிறது. மோட்டோரோலா ஒன் சீரிசில் மோட்டோரோலா ஒன் 5ஜி ஏஸ் மாடல் மட்டும் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. 

சிறப்பம்சங்களை பொருத்தவரை மோட்டோ ஜி பிளே 2021 மாடலில் 6.5 இன்ச் ஹெச்டி பிளஸ் எல்சிடி ஐபிஎஸ் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 460 பிராசஸர், 3ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி, 13 எம்பி + 2 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி செல்பி கேமரா மற்றும் 5000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டிருக்கிறது.

இத்துடன் பின்புறம் கைரேகை சென்சார் வழங்கப்பட்டு உள்ளது. ஆண்ட்ராய்டு 10 ஒஎஸ் கொண்டிருக்கும் மோட்டோ ஜி பிளே 2021 மாடல் மிஸ்டி புளூ மற்றும் பிளாஷ் கிரே நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை இந்திய மதிப்பில் ரூ. 12500 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.



மோட்டோ ஜி பவர் 2021 மாடலில் 6.6 இன்ச் ஹெச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 662 பிராசஸர், 3ஜிபி / 32 ஜிபி மெமரி மற்றும் 4 ஜிபி + 64 ஜிபி மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இத்துடன் 48 எம்பி + 2 எம்பி + 2 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

இத்துடன் 5000எம்ஏஹெச் பேட்டரி, 15 வாட் பாஸ்ட் சார்ஜிங், கைரேகை சென்சார் வழங்கப்பட்டு உள்ளது. ஆண்ட்ராய்டு 10 ஒஎஸ் கொண்டிருக்கும் மோட்டோ ஜி பவர் 2021 மாடல் குளோவிங் புளூ, போலார் சில்வர் மற்றும் பிளாஷ் கிரே நிறங்களில் கிடைக்கிறது. இதன் துவக்க விலை இந்திய மதிப்பில் ரூ. 14600 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

மோட்டோ ஜி ஸ்டைலஸ் 2021 ஸ்மார்ட்போன் 6.6 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 678 பிராசஸர், 4ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, 48 எம்பி + 2 எம்பி + 2 எம்பி பிரைமரி கேமரா, 16 எம்பி செல்பி கேமரா மற்றும் 4000 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் கொண்டிருக்கிறது.

இத்துடன் பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டு உள்ளது. ஆண்ட்ராய்டு 10 ஒஎஸ் கொண்டிருக்கும் மோட்டோ ஜி ஸ்டைலஸ் 2021 மாடல் அரோரா பிளாக் மற்றும் அரோரா வைட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை இந்திய மதிப்பில் ரூ. 22100 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.



மோட்டோரோலா ஒன் 5ஜி ஏஸ் மாடல் 6.7 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 750 ஜி பிராசஸர், 4ஜிபி / 64 ஜிபி மெமரி மற்றும், 6 ஜிபி / 128 ஜிபி மெமரி வேரியண்ட்களில் கிடைக்கிறது. இத்துடன் 48 எம்பி + 8 எம்பி + 2 எம்பி பிரைமரி கேமரா, 16 எம்பி செல்பி கேமரா மற்றும் 5000 எம்ஏஹெச் பேட்டரி, 15 வாட் சார்ஜிங் கொண்டிருக்கிறது.

பக்கவாட்டில் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் மோட்டோரோலா ஒன் 5ஜி ஏஸ் மாடலிலும் ஆண்ட்ராய்டு 10 ஒஎஸ் வழங்கப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் வொல்கானிக் கிரே மற்றும் பிராஸ்டெட் சில்வர் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை இந்திய மதிப்பில் ரூ. 29300 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News