ஆப்பிள் நிறுவனம் குறைந்த விலையில் ஏர்பாட்ஸ் மேக்ஸ் ஹெட்போனினை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
குறைந்த விலையில் ஏர்பாட்ஸ் மேக்ஸ் உருவாக்கும் ஆப்பிள்
பதிவு: ஜனவரி 07, 2021 14:19
ஆப்பிள் ஏர்பாட்ஸ் மேக்ஸ்
ஆப்பிள் நிறுவனத்தின் ஏர்பாட்ஸ் மேக்ஸ் வயர்லெஸ் ஹெட்போன் கடந்த ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் இதன் விலை ரூ. 59,900 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விலை உயர்ந்த சாதனங்கள் பிரிவில் இந்த ஹெட்போன் அறிமுகமாகி இருக்கிறது.
தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி, ஆப்பிள் நிறுவனம் தனது ஏர்பாட்ஸ் மேக்ஸ் ஹெட்போனின் குறைந்த விலை வேரியண்ட்டை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. ஹெட்போனின் விலையை குறைக்க புதிய மாடலில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்படி புதிய ஹெட்போன் அலுமினியம் இயர்கப் மற்றும் ஸ்டீல் ஹெட்பேண்ட்-க்கு மாற்றாக பிளாஸ்டிக் மூலப்பொருளாக பயன்படுத்தப்படலாம் என கூறப்படுகிறது. தற்போதைய ஹெட்போன் மெஷின் டெக்ஸ்ச்சர் செய்யப்பட்ட அலுமினியம் இயர்கப் மற்றும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் ஹெட்பேண்ட் கொண்டிருக்கிறது.
புதிய வயர்லெஸ் ஹெட்போன் விலை 350 டாலர்கள் இந்திய மதிப்பில் சுமார் ரூ. 25 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இந்த விலையில் புது ஆப்பிள் ஹெட்போன் சோனி WH-1000XM4 மற்றும் போஸ் குவைட்கம்பர்ட் 35 II போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும் என தெரிகிறது.
Related Tags :