தொழில்நுட்பம்
ஒன்பிளஸ்

கூகுளுடன் இணைந்து ஸ்மார்ட்வாட்ச் உருவாக்கும் ஒன்பிளஸ்

Published On 2020-12-21 12:55 IST   |   Update On 2020-12-21 12:55:00 IST
கூகுள் நிறுவனத்துடன் இணைந்து புதிய ஸ்மார்ட்வாட்ச் உருவாக்கும் பணிகளில் ஒன்பிளஸ் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.


ஒன்பிளஸ் நிறுவனம் புதிதாக ஸ்மார்ட்வாட்ச் உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக டீசர்கள் மூலம் அறிவித்து இருந்தது. எனினும், இதுவரை இந்த ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் செய்யப்படவில்லை. 

புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலை உருவாக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி தெரிவித்து இருக்கிறார். மேலும் கூகுள் நிறுவனத்துடன் இணைந்து வியர் ஒஎஸ் தளத்தை உருவாக்கி வருவதாக அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது.

ஒன்பிளஸ் தலைமை செயல் அதிகாரி பீட் லௌ புதிய தகவல்களை சமீபத்திய பேட்டியில் தெரிவித்தார். புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்வாட்ச் 2021 ஆண்டு அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இதன் வெளியீட்டு தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை.

முன்னதாக புது ஒன்பிளஸ் வாட்ச் பற்றிய விவரங்கள் ஐஎம்டிஏ (இன்போகாம் மீடியா டெவலப்மென்ட் அத்தாரிட்டி) வலைதளத்தில் லீக் ஆகி இருந்தது. அதில் புதிய ஒன்பிளஸ் வாட்ச் டபிள்யூ301ஜிபி எனும் மாடல் நம்பர் கொண்டு உருவாகி இருப்பதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

ஒன்பிளஸ் நிறுவனம் தனது வாட்ச் மாடலை எப்போது வெளியிடும், அதன் விலை எவ்வாறு நிர்ணயம் செய்யப்படும் என்பது குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை.

Similar News