தொழில்நுட்பம்
சாம்சங் கேலக்ஸி இசட் போல்டு 2

2021-இல் மூன்று மாடல்கள் - சாம்சங் அதிரடி திட்டம்

Published On 2020-12-07 04:12 GMT   |   Update On 2020-12-07 04:12 GMT
சாம்சங் நிறுவனம் அடுத்த ஆண்டு மூன்று மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிடுவதாக கூறப்படுகிறது.


சாம்சங் நிறுவனம் 2021 ஆண்டில் மொத்தம் மூன்று மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய திட்டமிடுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இவை கேலக்ஸி இசட் ப்ளிப் 2, கேலக்ஸி இசட் போல்டு 3 மற்றும் கேலக்ஸி இசட் போல்டு லைட் மாடல்கள் என்றும் கூறப்படுகிறது.

இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி கேலக்ஸி இசட் போல்டு 3 மாடலில் முதல் முறையாக அன்டர் டிஸ்ப்ளே செல்பி கேமரா வழங்கப்படும் என கூறப்படுகிறது. இதன் டிஸ்ப்ளே நாட்ச் 7.6 இன்ச்களில் இருந்து 7 இன்ச் ஆக குறைக்கப்பட்டு இரண்டாவது டிஸ்ப்ளே 4 இன்ச் ஸ்கிரீன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

கேலக்ஸி இசட் ப்ளிப் 2 ஸ்மார்ட்போன் 6.7 இன்ச் இன்டெர்னல் டிஸ்ப்ளே, 3 இன்ச் வெளிப்புற டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. முந்தைய தகவல்களில் இந்த ஸ்மார்ட்போன் பன்ச் ஹோல் ரக டிஸ்ப்ளே டிசைன் கொண்டிருக்கும் என கூறப்பட்டது. எனினும், இதுபோன்ற டிஸ்ப்ளே வழங்கப்படாது என்றே தெரிகிறது.

கேலக்ஸி இசட் போல்டு லைட் ஸ்மார்ட்போன் இசட் போல்டு 3 மாடலில் உள்ள டிஸ்ப்ளே அம்சங்களுடன், சற்றே குறைந்த ஹார்டுவேர் மற்றும் பிராசஸர் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இதே போன்று அன்டர் டிஸ்ப்ளே கேமராவும் இந்த ஸ்மார்ட்போனில் வழங்கப்படாது என கூறப்படுகிறது.
Tags:    

Similar News