சாம்சங் நிறுவனம் குறைந்த விலையில் உருவாகும் கேலக்ஸி இசட் ப்ளிப் லைட் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை உருவாக்கி வருகிறது.
குறைந்த விலையில் உருவாகும் கேலக்ஸி இசட் ப்ளிப் லைட்
பதிவு: நவம்பர் 20, 2020 12:15
கேலக்ஸி இசட் ப்ளிப்
சாம்சங் நிறுவனம் இதுவரை மூன்று மடிக்கக்கூடிய சாதனங்களை அறிமுகம் செய்து இருக்கிறது. இவை மூன்றும் அதிக விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலை விரைவில் மாறலாம் என தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கேலக்ஸி இசட் ப்ளிப் லைட் எனும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை சாம்சங் உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. இதன் விலை குறைவாக நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் மிக மெல்லிய கிளாஸ் (UTG) தொழில்நுட்பத்தை பயன்படுத்த இருப்பதாக தெரிகிறது.
இதே தொழில்நுட்பம் கேலக்ஸி போல்டு 2 மாடலிலும் பயன்படுத்தப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. சாம்சங் நிறுவனம் மிக மெல்லிய கிளாஸ் உற்பத்திக்கு ஆகும் செலவை குறைக்க திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. அந்த வகையில் எதிர்கால மடிக்கக்கூடிய சாதனங்களிலும் இதே கிளாஸ் பயன்படுத்தப்படலாம்.
குறைந்த விலையில் கேலக்ஸி இசட் ப்ளிப் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்வதன் மூலம் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் மீது கூறப்படும் பெரும் குறையை சரி செய்ய முடியும்.
2021 ஆண்டு ஜனவரியில் சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எஸ்21, எஸ்21 பிளஸ், எஸ்21 அல்ட்ரா ஸ்மார்ட்போன்களையும், அதன்பின் கேல்க்ஸி எஸ்21 எப்இ, கேலக்ஸி இசட் போல்டு 3, இசட் ப்ளிப் 3 மற்றும் இசட் போல்டு எப்இ உள்ளிட்ட மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.
Related Tags :