தொழில்நுட்பம்
ஜியோணி எப்8 நியோ

பட்ஜெட் விலையில் புதிய ஜியோணி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

Published On 2020-10-24 04:12 GMT   |   Update On 2020-10-24 04:12 GMT
ஜியோணி நிறுவனத்தின் புதிய எப்8 நியோ ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.


ஜியோணி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஸ்மார்ட்போனினை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போன் ஜியோணி எப்8 நியோ எனும் பெயரில் அறிமுகமாகி இருக்கிறது. 

இதில் 5.45 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளே, ஆக்டாகோர் பிராசஸர், 2 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி, 8 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் பேஸ் அன்லாக், ஸ்லோ மோஷன், பானரோமா, நைட் மோட், டைம் லேப்ஸ், பர்ஸ்ட் மோட், க்யூ ஆர் கோட், பேஸ் பியூட்டி மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.



ஜியோணி எப்8 நியோ சிறப்பம்சங்கள்

- 5.45 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளே
- ஆக்டாகோர் பிராசஸர்
- 2 ஜிபி ரேம்
- 32 ஜிபி மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 10
- 8 எம்பி பிரைமரி கேமரா
- 5 எம்பி செல்பி கேமரா
- 3000 எம்ஏஹெச் பேட்டரி
- 10 வாட் சார்ஜிங்

புதிய ஜியோணி ஸ்மார்ட்போன் பிளாக், புளூ மற்றும் ரெட் என மூன்றுவித நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் புதிய ஜியோணி எப்8 நியோ விலை ரூ. 5499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

இந்த ஸ்மார்ட்போனை நாடு முழுக்க கொண்டு சேர்க்க ஜியோணி யுடானுடன் கூட்டணி அமைத்துள்ளது. இதனால் நாடு முழுக்க சுமார் 1.5 லட்சம் முதல் 2 லட்சம் மொபைல் போன் விற்பனையாளர்களிடம் ஜியோணி எப்8 நியோ கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
Tags:    

Similar News