தொழில்நுட்பம்
ரூ. 990 விலையில் புதிய வயர்லெஸ் ஹெட்போன் அறிமுகம்
சவுண்ட் ஒன் நிறுவனத்தின் புதிய வயர்லெஸ் ஹெட்போன் ரூ. 990 விலையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
ஆடியோ சாதனங்களை உற்பத்தி செய்யும் இந்திய நிறுவனமான சவுண்ட் ஒன் புதிய வயர்லெஸ் ப்ளூடூத் ஹெட்போனினை அறிமுகம் செய்துள்ளது. புதிய வயர்லெஸ் ஹெட்போன் வி11 என அழைக்கப்படுகிறது. இது முந்தைய வி10 மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும்.
அப்டேட் செய்யப்பட்ட மடிக்கக்கூடிய வடிவமைப்பு, நீண்ட பேட்டரி பேக்கப், பேசிவ் நாய்ஸ் கேன்சலேஷன் மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
சவுண்ட் ஒன் வி11 வயர்லெஸ் ஹெட்போன்களில் 40 எம்எம் டிரைவர்கள் வழங்கப்பட்டுள்ளன. இவை தரமான ஆடியோ அனுபவம் மற்றும் டீப் பாஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இது மடிக்கக்கூடிய வடிவமைப்பு, ஹெட்பேண்ட் மற்றும் இயர்கப்களில் மிக மென்மையான குஷன்கள் வழங்கப்பட்டு உள்ளது.
கனெக்டிவிட்டியை பொருத்தவரை ப்ளூடூத் 5.0 வழங்கப்பட்டுள்ளது. இதில் பேட்டரி தீர்ந்து போனால், 3.5 எம்எம் ஆடியோ ஜாக் கொண்டு வயர்டு மோடிலும் பயன்படுத்த முடியும். பேட்டரியை பொருத்தவரை ஒரு முறை சார்ஜ் செய்தால் 20 மணி நேர பேக்கப் வழங்கும் என சவுண்ட் ஒன் தெரிவித்துள்ளது.