தொழில்நுட்பம்
மோட்டோரோலா

இணையத்தில் லீக் ஆன 2020 மோட்டோ ரேசர் விவரங்கள்

Published On 2020-09-04 12:05 GMT   |   Update On 2020-09-04 12:05 GMT
மோட்டோரோலா நிறுவனத்தின் 2020 மோட்டோ ரேசர் ஸ்மார்ட்போன் ரென்டர்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கின்றன.

மோட்டோரோலா நிறுவனம் இரண்டாம் தலைமுறை மோட்டோ ரேசர் ஸ்மார்ட்போனை வெளியிட திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி புதிய ரேசர் ஸ்மார்ட்போன் 5ஜி வசதி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

சீன சந்தையில் 2020 மோட்டோ ரேசர் ஸ்மார்ட்போன் செப்டம்பர் 10 ஆம் தேதி அறிமுகமாக இருக்கிறது. இந்நிலையில், வெளியீட்டிற்கு முன் புதிய ரேசர் ஸ்மார்ட்போன் ரென்டர்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது. 5ஜி மட்டுமின்றி புது ரேசர் ஸ்மார்ட்போனின் செயல்திறன் மற்றும் வடிவமைப்புகளில் மாற்றம் செய்யப்பட்டு இருக்கலாம்.



புது ரென்டர்களின் படி 2020 மோட்டோ ரேசர் ஸ்மார்ட்போன் தோற்றத்தில் முந்தைய வெர்ஷன் போன்றே காட்சியளிக்கிறது. எனினும், இந்த மாட் கிளாஸ் மூலம் உருவாக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. முந்தைய மோட்டோ ரேசர் ஸ்மார்ட்போன் பிளாஸ்டிக் மூலம் உருவாக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

2020 மோட்டோ ரேசர் ஸ்மார்ட்போன் 48 எம்பி பிரைமரி சென்சார் கொண்டிருக்கும் என தெரிகிறது. இதன் உள்புறம் 20 எம்பி கேமரா வழங்கப்படும் என தெரிகிறது. தற்போதைய மாடலில் 5 எம்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

புதிய மோட்டோரோலா ரேசர் மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 765 பிராசஸர், 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி, 2845 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படும் என கூறப்படுகிறது. இத்துடன் ஸ்னாப்டிராகன் எக்ஸ்52 மோடெம் மூலம் 5ஜி கனெக்டிவிட்டி வழங்கப்படுகிறது.
Tags:    

Similar News