தொழில்நுட்பம்
நோக்கியா 2.1

ஆண்ட்ராய்டு 10 அப்டேட் பெறும் நோக்கியா 2.1

Published On 2020-09-04 05:09 GMT   |   Update On 2020-09-04 05:09 GMT
ஹெச்எம்டி குளோபல் நோக்கியா 2.1 ஸ்மார்ட்போனிற்கு ஆண்ட்ராய்டு 10 கோ எடிஷன் அப்டேட் வழங்கி வருகிறது.


ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் நோக்கியா 2.1 ஸ்மார்ட்போனிற்கு ஆண்ட்ராய்டு 10 அப்டேட்டை வழங்கி வருகிறது. அந்த வகையில் ஆண்ட்ராய்டு 10 அப்டேட் பெறும் 17-வது நோக்கியா ஸ்மார்ட்போனாக இது இருக்கிறது.

முன்னதாக நோக்கியா 8.1, நோக்கியா 9 பியூர்வியூ, நோக்கியா 7.1, நோக்கியா 6.1 பிளஸ், நோக்கியா 7 பிளஸ், நோக்கியா 6.1, நோக்கியா 2.2, நோக்கியா 7.1, நோக்கியா 3.2, நோக்கியா 4.2, நோக்கியா 8 சிரோக்கோ, நோக்கியா 2.3, நோக்கியா 6.2, நோக்கியா 1 பிளஸ், நோக்கியா 5.1 பிளஸ் மற்றும் நோக்கியா 1 ஆண்ட்ராய்டு கோ எடிஷன் மாடல்களுக்கு ஆண்ட்ராய்டு 10 அப்டேட் வழங்கப்பட்டு இருக்கிறது.



நோக்கியா 2.1 ஸ்மார்ட்போன் 2018 மே மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளம் கொண்டு வெளியிடப்பட்டது. பின் இதற்கு ஆண்ட்ராய்டு 9 பை அப்டேட்டும், தற்சமயம் ஆண்ட்ராய்டு 10 அப்டேட்டும் வழங்கப்பட்டு உள்ளது.

புது அப்டேட் நோக்கியா 2.1 ஸ்மார்ட்போனிற்கு பிரைவசி மற்றும் செக்யூரிட்டி அம்சங்கள், டார்க் தீம், ஃபோக்கஸ் மோட், பிரத்யேக பிரைவசி செக்ஷன் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.
Tags:    

Similar News